பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 கிழார்ப் பெயர்பெற்ருேர் டுள்ளது என்றும், ' சுத்தமலி வளநாட்டுப் பாம்புணிக் கூற்றத்துப் பாம்புணிகிழான் மல்லாண்டானை சோ கோன்’ (S. . . Vol. S. No. 652) என்றுவரும் தொடரால், கோன் என வழங்கப்பெறும் இடையர்க்கும், கிழார் என்பது சிறப்புப் பெயராக வழங்கப்பட்டுள்ளது என்றும் கொள்ளவேண்டியிருப்பதால், கிழார் என்பது வேளாளரைக் குறிக்கவரும் பெயராம் என்பதை ஏற்றுக் கோடற்கில்லே எனவும், எருக்கங்குடி கல்வெட்டொன்.வ, பாண்டியன் நெடுமாறன் பூரீ வல்லபன் காலத்தில் எட்டிச் சாத்தன் என்பவன், இருஞ்சோனுட்டுக் கூடற்குடி, குளத் தார், துழாயூர், இருப்பைக்குடி, வெளியங்குடி, ஆலங்குடி என்ற ஊர்கட்குத் தலைவனுய், பாண்டிவேக் கல்ை இருப் பைக்குடி கிழான் என்று சிறப்பிக்கப் பட்டான் எனக் கூறுவதால், கிழார் என்ற பெயர், அக்கால அரசர்களால், அக்கால மக்களுக்கு யாதோ ஒரு காரணம் பற்றி வழங்கிய சிறப்புப் பெயராம் எனவும் கூறுவர் திருவாளர் ஒளவை. சு. துரைசமிப் பிள்ளையவர்கள். (செந்தமிழ்ச் செல்வி : சிலம்பு : 23, பக்கம்: 185). இறையனர் களவியலுரையில் சங்கப் புலவர்களின் தகுதி, திறமை அறிய கின்முேன் எனச் சிறப்பிக்கப் பெறும், உப்பூரிகுடி கிழார் மகனை உருத்திர சன்மனே, அவ்வரலாறு உரைக்கும் நூல்கள் செட்டிமகன் என்றே கூறுவதால், களவியலுரை எழுந்த சங்க காலத்திலேயே, கிழார் என்ற சிறப்புப் பெயர், வணிகர்க்கும் உரியதாக வழங்கப்பட்டுள்ளது என்று அறிகிருேம்.

  • ஊரும் பெயரும்” என்ற சூத்திரப் பொருளையும், அதன் உரையில், அந்தணர், அரசர், வணிகர் ஆகிய குலத்து வந்தார் பெயர்களோடு அவர் ஊர் முதலாயின அறிவிக் கும் தொடர்இணய வந்து வழங்கும் வழக்கத்திற்கு எடுத்துக் காட்டாகக் காட்டப்பெற்ற பெயர்களையும் ஊன்றி நோக்கியவழி, கிழார் என்ற சிறப்புடையார் வேளாள ரிலும் உளர் என்பதல்லது, கிழார் என்ற சிறப்பு வேளாளர்க்கே உரியது என்பது பேராசிரியர்க்கும் கருத்தன்று என்பது புலனும்,