பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 கிழார்ப் பெயர்பெ ற்ருேர் உரிமையைத் தனதாக்கிக்கொள்ள விரும்பின்ை நலங் கிள்ளியும்; இதல்ை நெடுங்கிள்ளிக்கும், கலங்கிள்ளிக்கும் பகை உண்டாயிற்று; பகைவன் படைப்பலம் பெற்று வளர் தற்கு முன்னரே அவனே அழித்து விடுவதே போர் துணுக்கமாம் ஆதலின், நெடுங்கிள்ளி உறையூர் செல்லா வாறு, அவனே அவன்வாழும் ஆவூர்க்கோட்டையிலேயே அழித்துவிட எண்ணினன்; அவ்வாறே பெரும் படை யோடு சென்று ஆவூர்க்கோட்டையை முற்றுகை யிட்டான் ; நெடுங்கிள்ளி, நலங்கிள்ளியின் பெரும்படையை எதிர்த்துத் தாக்கும் வன்மை தன் படைக்கு இல்லாமை யால், ஆவூர்க்கோட்டையுள் அடைத்திருப்பானுயினன் ; முற்றுகை பல நாள் நீடித்தது; உள்ளிருப்போர்க்கு வேண்டும் உணவுமுதலாம் பொருள்கள் கிடைப்பது அரியவாயின ; அந்நிலையை எண்ணியும், அவன் அரண் திறந்து வெளிவந்து போரிட்டானல்லன் ; கலங்கிள்ளியும் முற்றுகையினைத் தளர்த்தினுனல்லன் ; உள்ளிருப்போர் வருந்தலாயினர் : இங்கிலையினே உணர்ந்தார் கோஆர்கிழார். இம்முற்றுகையால், உள்ளே வாழ்வோர் துன்புறுவதை விரும்பினால்லர் , இங்கிலையை மாற்ற எண்ணினர் ; ஒரு அரசன் தன்னைத் தாக்க வருகின்ருன் எனின், ஆற்றல் இருந்தால் வருவோனே எதிர்த்துத் தாக்குதல் வேண்டும் ; இன்றேல் அடங்கிப் பணிந்து போதல் வேண்டும் ; இரண்டும் செய்யாது அரனுக்குள் அடங்கியிருப்பது அரசர்க்கு அழகன்று; ஆதலின், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி இருவரில் தவறு செய்வோன் நெடுங்கிள்ளியே என்று உணர்ந்தார் ; உடனே அரனுள் சென்ருர் ; அவனே அழைத்து, “அரசே! உண்டற்குரிய உணவும், குடித்தற் குரிய நீரும் கிடைக்கப்பெருமல் யானைகள் வருந்துகின்றன; பால் கிடைக்கப்பெருத குழந்தைகள் கதறிக் கதறி அழுகின்றன ; மகளிர், மலர்சூட்டுவதின்றியே தம் தலை மயிரை வறிதே முடிக்கின்றனர்; வளம் வற்றிய மனைகளில் வாழ்வார் அழுது அாற்றுகின்றனர்; இவற்றையெல்லாம் கண்டும், கேட்டும் இனிதே அடங்கியிருத்தல் அழகன்று ; அறம் கிற்கும் உள்ளத்தணுயின், மாற்ருன் கை ஒப்பித்து