பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 கிழார்ப் பெயர்பெற்ருேர் ளியை நோக்கி அரசே! இவன் உண்மையில் ஒற்ற னல்லன்; என்னைப்போல் இவனும் ஒரு புலவன் ; பழுமரம் தேடிச் செல்லும் பறவைபோல், பரிசில் நல்கும் பெருங் கொடையாளரை, கடத்தற்கரிய வழிகளைக் கடந்த தேடிச் சென்று அடைந்து அவரைத் தாம் அறிக்காங்கு பாடி, அவர்கொடுப்பன பெற்று மகிழ்ந்து, பெற்ற பொருளேத் தமக்கே எனப் பேணி வைத்துக்கொள்ளாது, பிறர்க்கும் கொடுத்து வாழும் இயல்பினராய புலவர் பிறர்க்குத் துயர்தர எண்ணியுமறியார் ; கல்வியால் மாறுபட்டாரைத் தம் புலமையால் வென்று, மண்ணுள் வேந்தரேபோல், இறுமாந்து வாழ்தலே அவர்க்கு இயல்பு; அத்தகைய புலவருள் ஒருவனய இவன், நினக்குத் தீங்கு எண்ணுவா னல்லன் ; ஆதலின் இவனே உயிரோடு போக விட்டு அருள் பண்ணுவாயாக!” என்று கூறினர் : ' வள்ளியோர்ப் படர்ந்து, புள்ளிற்போகி, செடிய என்னது சாம்பல கடந்து, வடியாகாவின் வல்லாங்கு பாடிப், பெற்றது மகிழ்ந்து, சுற்றம் அருக்கி, ஒம்பாதுஉண்டு, கூம்பாது வீசி, வரிசைககு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை, பிறர்க்குத் தேறிந்தன்ருே வின்றே; சிறப்பட கண்ணுர்காண அண்ணுந்தேகி, ஆங்கினிது ஒழுகினல்லது, ஒங்குபுகழ் மண்ணுள் செல்வ மெய்திய தும்மோரன்ன செம்மலும் உடைத்தே. (புறம்: சஎ) புலவர் சொல் போற்றும் பண்புடையன் ஆதலின், கோவூர்கிழார் கூறியன கேட்ட நெடுங்கிள்ளி, கொல்லக் கருதிய இளந்தத்தனைப் பிழைத்துப்போக விடுத்துப் புகழ் கொண்டான். நெடுங்கிள்ளி, இளந்தத்தன் பால் நடந்துகொண்ட முறைகளை எண்ணிப் பார்த்த நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, பெரிதும் விழிப்பாயுளன் ; காலம் கடத்தின், பின்னர்

  1. -