பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவூர் கிழார் 109. வெற்றிகண்ட கோஆர்கிழார், உலகத்தின் ஒவ்வொரு பகுதி யிலும், உலகப்போர் நோக்கிப் போகுந்தோறும் தோன்றிப் போர் ஒழியத் துணைபுரிவாாாக. இவர் பாடிய பாக்களைக்கொண்டு நோக்கிய வழி, கோஆர்கிழாரின் அரிய பண்புகள் பல நமக்குப் புலனுகும்; அவரோர் சிறந்த புலவர்; புலவரைப் போற்றும் பேருள்ளம் வாய்ந்த புலவர்; மன்னுயிர்க் கிரங்கும் தண்ணருள் உடைய வர் , அறம், பொருள், இன்பம் மூன்றனுள், பொருள் பெற்ருர் ஏனேயிாண்டையும் பெறுவர் எனக்கூறும் பொரு ளுடையார் போலாது, பொருளும், இன்பமும், அறத்தின் பின்னும் என்னும் அறமுடையாராவர் : " சிறப்புடை மரபின் பொருளும், இன்பமும் அறத்து வழிப்பஉேம்.” (புறம்: க.க).