பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஉ. கோழியூர்கிழார் மகனுர் செழியனுர் செழியன் என்ற பெயர் பாண்டியர்களைக் குறிக்க வழங்கும் பெயர்; கோழியூர்கிழார் மகனுகிய இவர், பாண் டியர் மரபோடு யாதேனும் உறவுடைமையினலோ, அல்லது, அப்பாண்டிய அரசின்கீழ் தொழிலாற்றியதி குலோ இவர் செழியன் என அழைக்கப் பெற்றுள்ளார். வேங்கைமலராலாய மாலைபோலும் தோற்றத்தை யுடைய குட்டிகளைப் பெற்றுப் பெண்புலி பசித்திருத்தல் அறிந்த ஆண் புலி, மத்தகம் பிளந்துபோகுமாறு ஆண்யானே யொன்றைக் கொன்று, கொன்ற வெற்றியால் இடிபோல் முழங்கும் கொடுவழிகளையும் தலைவிபால் தான் கொண் டுள்ள அன்பால் அஞ்சாது கடத்துவந்து கின்ற தலைவனே, தோழி, தலைவ! நீ இவ்வாறு தவரு துவந்து அன்பு. காட்டிச் செல்வதால் அருளுடையான்போல் தோன்று கின்றன. ஆயினும், இருளால் கிறைந்து, அவ்வழிச் செல் வார்க்கு அச்சத்தை விளைவிக்கும் பாம்புகள் கிறைந்த வழியாகவே வருகின்றனே யாதலின், உண்மையில் நீ அருளுடையானல்லன்” என்று கூறி, அவன் நாள்தோறும் வந்து அன்பு செய்யினும், அவ் அன்பால் மகிழாது அவன் வரும்வழி ஏதம்கண்டு அஞ்சும், தம் அருள் உள்ளத்தைப் புலப்படுக்கும் அரிய செய்யுளொன்று செழியனர் பெய ால் வந்துளது : ' வயப்புனிற்று இரும்பினப் பசித்தென, வயப்புலி புகர்முகம் சிதையத் தாக்கின் களிறட்டு உருமிசை உாறும் உட்குவரு கடுநாள் அருளினை போலினும், அருளாய் அன்றே, கனையிருள் புதைத்த அஞ்சுவரும் இயவில் பாம்புடன் திரிக்கும் உருமோடு ஒங்குவாைநாட! நீ வருதலானே.” (நற் : .அங்) பதிணை