பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங். செல்லுணர்கிழார் மகனுர் பெரும்பூதங்கொற்றனுர் கொற்றனர், பூதங்கொற்றனர் என்ற பெயர்கள், பழங் தமிழ்ப் புலவர்கள் பயில மேற்கொண்ட பெயர்களாம். இவருடைய பேரறிவு தோன்ற, இவர் பெரும்பூதங்கொற்ற ர்ை என அழைக்கப்பெற்ருர். செல்லூர் என்ற பெயரால் ஊர்கள் பலவுள; கோசர்வாழும் நியமம் என்ற ஊருக்கு அருகே செல்லூர் உளது; அச்செல்லூரில் இளங்கோசர் பலர் ஒன்றுகூடிக் கடலாடு மகளிர் கொய்துதந்த புலிநகக் கொன்றையினேயும், கழனியுழவர் பறித்துப்போட்ட குவளையினையும், காவற்காட்டில் மலர்ந்த முல்லையோடு கலந்துகட்டிய கண்ணியணிந்து விளையாடுவர்; அச்செல்லூர் ஆதனெழினி என்பானுக்குரியது என்ற செய்திகளைத் தமிழ் நூல்கள் அறிவிக்கின்றன. பெரும்பூதங்கொற்றனர் தாம் பாடிய நெய்தல் திணைப் பொருள் தழுவிவந்த ஒரு செய்யுளில், மலர்த்தாதுக்கள் உதிர்ந்து மணங்கமழும் புதிய மணல்மேட்டில், தோழிமா ரோடுகூடி, மணல் வீடுகட்டி மகிழ்ந்திருக்குங்கால், தன் தேரையும், தன் உடன்வந்தாரையும் தொலைவில் சிறுத்தி விட்டு வந்து, நாம் கட்டிய மணல்வீட்டைப் பாராட்டிச் சென்ருன் ஒர் ஆண்மகன் என்று, தாம் தலைவனே முதலிற் கண்ட நிலையினைத் தோழி கூறும் துறை அமைத்துப் பாடி யுள்ளார்.

  • மணங்கமழ் இளமணல் எக்கர்க் காண்வாக்

கனங்கொள் ஆயமொடு புணர்ந்து விளையாடக் கொடுஞ்சி நெடுந்தேர் இளையரொடு நீக்கித் தாான் கண்ணியன் சோவந்து ஒருவன் வரிமனை புகழ்ந்த கிளவியன்.” (அகம் : உடுo)