பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் 5 நல்லதன் நலனும், தியதன் தீமையும் உள்ளவாறு உணர்ந்து அடங்கிய பண்பினராய், அன்பும் அறனும் அக லாது காத்துப், பழி ஒழித்துப் புகழ் மேற்கொண்டு பிறர் போற்ற வாழ்ந்த பெரியார்களுக்குக் காவிதி' என்ற சிறப்புப் பெயரினையும், கொள்வதுர்உம் மிகை கொளாது கொடுப்பது உம் குறை கொடாது பல் பண்டம் பகர்ந்து வாழும் பண்பினராய வணிகர்குலச் செல்வர்க்கு எட்டி’ என்ற சிறப்புப் பெயரினேயும், பெய்யும் பெருமழையைத் கான் காங்கிக் தன்னே உடையான் மீது ஒரு சிறு துளியும் விழா வண்ணம் காத்துத் துணை புரியும் குடையே போல், தன் அரசன் மீது பகைவர் அம்பொன்றும் அழுந்தா வண்ணம், அவர் ஏவும் அம்புகள் அனைத்தையும் காம் ஏற்றுக்கொண்டு தலைவனைக்காக்கும் கடமை வழுவாப் படை வீரர்க்கு ஏளுதி ' என்ற சிறப்புப் பெயரினையும் அளித்துப் பாராட்டுவது அக்கால அரசர் மரபு. - பண்டைய தமிழகத்து, பிறப்பால் ஒரு தொழிலிற்கு உரிமை செய்யப் பட்டவரல்லர் ; பிறப்பால் அவர்கள் அனே வரும் ஒருவரே ; தாம் தாம் விரும்பிய தொழிலே மேற் காள்ள அவர்கள் உரிமை பெற்றிருந்தனர் , அந்தணர் மகன், அரசாளவும் படைத்தொழில் மேற்கொள்ளவும், புண்ட வாணிபம் கடத்தவும், பயிர்த் தொழில் மேற் கொள்ளவும் செய்வன் , அரசன் மகன், அற நூல் ஒதவும், அக்காலத் தொழில் பல அறியவும் செய்வன் ; வணிகர். மகன், அந்தணர், அரசர், வேளாளர்க்காம் தொழில் பலவும் அறிந்திருப்பன் ; அதைப் போன்றே, பயிர்த் தொழில் மேற் கொண்டோன் மகன் பாராளவும், படைத் தொழில் பயிலவும், கலம்பல செலுத்திக் கடல் வாணிபம் புரியவும், வேகம் ஒதவும் உரிமை பெற்றிருந்தான். அகனல், அரசர்கள், மக்கள் பிறக்ககுடி கண்டு சிறப் பிக்காது, அவர் மேற்கொண்ட தொழிலின் திறம்கண்டு சிறப்பித்தனர். சிறந்த கல்வியும், சீரிய ஒழுக்கமும் பெற்றுக் தி க ழ் ந் தார், எக்குடிப் பிறந்தாாயினும், அவர்க்குக் காவிகி’ப் பட்டத்தினையும், படைத்