பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள. நொச்சி நியமங்கிழார் இப்புலவர்க்கு சியமம் என்னும் ஊர் உரியதாகும் ; இப் பெயருடைய ஊர்கள் தமிழ்நாட்டில் பல இருத்தலின், வேறுபாடு அறிதற்கு, இவ்வூர் நொச்சி வேலியால் குழப் பட்டிருப்பதைக் கொண்டு நொச்சி கியமம் என வழங்கப் படலாயிற்று : திருச்சிராப்பள்ளியிலிருந்து முசிரிக்குச் செல்லும் வழியில் உத்தமர் கோயிலுக் கண்மையில் உள்ள நொச்சியம் என்ற ஊர்ே நொச்சி கியமமாம். கொச்சி நியமங்கிழார் ஆழ்ந்த அறிவுடையாாவர்; அவர் கருத்துக்களை இன்சுவை தோன்ற விளங்க வைக்கும் திறம் வாய்ந்தவர்; இற்செறிக்கப்பட்ட தலைமகள், தான் தலைவளுேடு கொண்டிருக்கும் தொடர்பினைத் தாய் அறி யாது காப்பது எத் துணை அரிது என்பதை எடுத்துக் காட்டி, வரையாது ஒழுகும் தலைமகன் உள்ளத்தில் வரைதல் எண்ணம் தோன்றச் செய்யும் திறம் மிக மிக் இனிதாம்; தலைவி, எப்போதும் தலைவனேயே எண்ணிக் கொண்டுள்ளாள் ; ஒருநாள், அவள் தலைவனே முதன் முத லாகக் கண்ட இடத்தை நோக்கினுள்; அதனுல் அவன் எண்ணம் உண்டாக, அவள் அடக்கவும் அடங்காது அவள் கண்கள் அழலாயின ; அங்கிலையில் ஆண்டு வந்த அவள் அன்னே அவள் கிலே கண்டு, அவளே அன்போடு அணைத் துக்கொண்டு இவ்வாறு வருந்துவது ஏனே என வினவி ள்ை ; தாய். அவ்வாறு கேட்டபோது அவள் தலைவன் கினேப்பேயாய் கின்றிருந்தமையாலும், அங்கிலேயில் தாய் காட்டிய ஆதரவால் கன்னே மறந்திருந்தமையாலும், தன்னையும், தன் பெண்மைக்குரிய நாணேயும் மறந்து, இந் நோய் செய்தான் ஒரு ஆண்மகன் என்று கூறத் தொடங்கி விட்டுத் திடீரென அறிவு வந்தவளாய், அதை மறைத்து வேறு காரணம் கூறி வின்ருள். இத்தகைய இட்ர்ப்பட்ட கிலேயினை எவ்வளவு நயமாகக் கூறியுள்ளாள் என்பதை நோக்குங்கள் ; உற்றவிடத்துதவும் அறிவுடையர் அக் காலப் பெண்கள் என்பதைப் புலவர் அழகாகக் காட்டி புள்ளார் : .3