பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உகூ. பெருங்குன்றுார் கிழார் பெருங்குன்றார் கிழார், குடக்கோ இளஞ்சோலைப் பாடி யுள்ளமையால், சேரநாட்டிலும் வாழ்ந்தவர்; உரு வப்பஃறேர் இளஞ்சேட் சென்னியைப் பாடியுள்ளமையால், சோழநாட்டிலும் வாழ்ந்தவர்; பேகன்னப்பாடியுள்ளமை யால், பாண்டிநாட்டிலும் வாழ்ந்தவர் எனப் புலப்படுவதால், அவர் பிறந்தநாடும், ஊரும் இதுவென அறுதியிட்டுக் கூறு கற்கில்லை; பெருங்குன்றார் கிழார், கடைச்சங்கத்தே அமர்ந்து தமிழாராய்க்த் புலவர்களுள் ஒருவராவர் என்ற புகழுடையவர்; அருள்கிரம்பிய உள்ளமுடையவர்; வறு மையில் உழன்றவர்; வறுமையால் வாடிய காலத்தும், செம்மைக்குணத்தில் பிறழாப் பண்பாளர். இவாற் பாடப் பெற்ருேர், சேரமான் குடக்கோ இளஞ்சோல் இரும் பொறையும், சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென் னியும், பேகனுமாவர். பெருங்குன்றார் கிழார் பொருளற்ற வறியார்வர்; அவர் வீட்டில் வாழும் எலிகள், உண்ணுதற்காம் பொரு ளேக் காணவேண்டி அவ்வீட்டில் பல்வேறு இடங்களேயும் மாறிமாறி அகழ்ந்தும் ஒன்றும் கிடைக்காமையால் மடிந்து வீழ்ந்திருக்கும்; அவர் இளையமகன், அவன் தாயிடத்தே பாலுண்ணவேண்டிப் பலகாலும் செல்லவும், உணவுண்டு பலநாளாகிய காரணத்தால் பால்சுரத்தல் கின்ற அவளிடத்தில் பால் இன்மையறிந்து பாலுண் வேட்கை யினேயே மறந்து விட்டான் எனின், அவர் வறுமையின் கொடுமையினை என்னென்பது - . . வறுமையில் வாடிப் பலநாள்வாழ முடியாது; பாண் டேனும் சென்று பொருள்பெற்று வருதல்வேண்டும் என்று முடிவுகொண்ட பெருங்குன்றுார் கிழார், தமக்கு வேண்டும் பெரும் பொருள்கொடுக்க வல்லோன், சோ நாடாண்டிருந்த குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையே என உணர்ந்து சேரநாடடைந்து, இரும்பொறையைக் கண்டு, முரசெழுத்திரங்கும் தானேயொடு தலைச்சென்று