பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 கிழார்ப் பெயர்பெற்றேர் என்பர் வள்ளுவர்; வாயில் வந்து சிற்போர்க்கும், புகழ் பாடிவருவார்க்கும் வாரிவழங்கும் வள்ளியோர் வாழ் வகிேைலயே, இரவலரும், புலவரும் இறவாத வாழ்கின் றனர்; அரசர்கள்பால் அவ்வருட்குணம் இல்லாது போனுல் இரவலர் இல்லாது அழிவர். ஆதலின் இரப்பார்க்கு ஒன்று 'ஈவதைக் கடப்பாடாகக் கொள்வது காவலர்க்கழகு. ஆனல், அரசரெல்லாம் கின்னேப் போல்வராயின், என்னப் போலும் புலவர்கள் பிறவாதொழிவாராக என்றும் பழித்து வெளியேறினர். 'தும்மனேரும் மற்று இனைய ராயின், எம்மனேர் இவண் பிறவலர் மாதோ.’ (புறம் : உக.) உளம் வருந்த வெளியேறும் புலவர் பெருங்குன்றார் கிழார், தம் வறுமை தீர்க்கும் வள்ளியோன் யாண்டுளகுே என எண்ணிப்பார்த்து, அக்காலைச் சோணுடாண்டிருந்த உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னிபால் அவ் வருட் குணம் இருப்பது அறிந்து சோணுடு நோக்கி நடந்தார்: சென்னியைக் கண்டார்; அவன் சிறப்பும், அவன் நாட் டின் சிறப்பும் தோன்றப் பாராட்டினர் ; பெருங்குன்றார் கிழாரின் புலமைாலம் அறிந்து வியந்த அவன், அவரை விரைவில் அனுப்பும் விருப்பம் இலஞயினன்; அதனல் புலவர் விரும்பும் பொருளே உடனே கொடானுயின்ை ; அவன் உளம் அறிந்த பெருங்குன்றார் கிழார், இனி வாய டைத்து வாழின் வறுமை தீர்தற்கு வழியில்லை; நம் குறையினே வாய்விட்டுக் கூறவேண்டுவதே எனத் துணிந்து, ‘அரசே! நல்குரவால் மெலிந்துள்ளேன் நான்; இருந்து வாழ்வது விருந்து ஒம்புதற்கு என்ப; ஆனல் நானே வீடு நோக்கிவந்த விருந்தினரைக் கண்ட உடனே வணங்கி வரவேற்பதற்கு மாருக, ஒடி ஒளித்துக்கொள்கின்றேன் ; காரணம் விருங்கேற்று உபசரித்தற்காம் பொருளின் மையே. இவ் வறுமையிலே என் அறிவையும் அழித்து விடுகிறது; ஆதலின், அரசே! சான்ருேர், அவையிடை வந்தார், வாய்விட்டுச் சொல்லாமுன், முகக் குறிப்பின லேயே உள்ள குறையுணர்ந்து தீர்ப்பர் எனின், அச் சான்