பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருங்குன்றார் கிழார் 125 ருேர் கூடியிருக்கும் அவைநடுவே நின்று என் குறை யிது : இதைத் தீர்த்து வைப்பீாக என்று ஒருவன் கூறினன் எனின், அவன் குறையினே அச் சான்ருேர் அப்போதே தீர்த்துவைப்பர் ; அதைப்போன்றே எம் வறுமையினையும் விரைவில் போக்கித் துணை புரிய வேண்டுகின்றேன்.” என்று கூறிஞர். o "சான்முேர் இருந்த அவையத் துற்முேன் ஆசா கென்னும் பூசல் போல வல்லே களை மதி யத்தை உள்ளிய விருந்த கண் டொளிக்கும் திருக்கா வாழ்க்கைப் பொறிப்புணர் உடம்பிற் முேன்றியென் அறிவுகெட நின்ற நல்கூர்மையே.” (புறம் : உசுசு) புலவர் வாய்விட்டு வருந்துவது கண்ட இளஞ்சேட் சென்னி, அவர் விரும்பும் பொருளெலாம் அளித்து மகிழ்ந்து வழிகொடுத்தான் ; சென்னி யளித்த பொருள் கொண்டு சின்னுள் சிறக்க வாழ்ந்தார் ; வாங்கிய பொருளே வைத்து வாழவேண்டும் என்ற குறுகிய உள்ளமுடையவ ரல்லர் புலவர் ; தம்மைப்போல் வறுமையால் உழலும் ஊரார்க்கும் உறவினர்க்கும் கொடுத்தமையால் பொருள் குன்றிவிட்டது ; மீண்டும் வறுமை வந்துற்றது. வந்த வறுமைபோக வழங்கக்கூடிய வள்ளலைத் தேடிச்சென் ருர். பாண்டிநாட்டில், பொதினி என்ருேர் மலையுண்டு; அஃது ஆவிநன்குடி எனவும் வழங்கப்பெறும் : இவ் ஆவி நன்குடிக்கு உரியவன் பேகன்; பேகன், பெருங் கொடை வள்ள்லாவன்; ஒருநாள் உலாப்போங்க பேகன், குளிர்ந்த வாடை வீசவும், விசும்பில் முகிற்குலம் கறுத்துத் திரண்டு மூடிக்கொள்ளவும் கண்ட மயிலொன்று, தன் கோகை விரித்து ஆடுவதைக் கண்டான்; அது வாடையால் வருந்து கிறது என்று எண்ணினன் ; அதன் பால் இரக்கம் பிறந் தது ; உடனே வாடைக்கு அஞ்சித் தான் அணிந்து வங் திருத்த அழகிய பொன்னடையை அம் மயில் மீது போர்த் தினன். பேகனின் அருள் உள்ளத்தையும் கொடைச்