பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 கிழார்ப் பெயர்பெற்ருேர் சிறப்பையும் உணர்த்தும் இவ் வரிய நிகழ்ச்சியினைப் புலவ ரும் பிறரும் பாராட்டுவாராயினர். - பேகன் பெருமையுணர்ந்த பெருங்குன்றார் கிழார், மலையிடை வழிகள் பலவற்றைக் கடந்துசென்று அவன் மனே யடைந்தார்; அம் மனே முன்றிலில் ஒரு பெண், கனிய ளாய் கின்று வருந்துவதைக் கண்டார் ; அவள் அருகே சென்று, அம்மையே, தனியே அழுதுகிற்கும் Fa6ir யாவிரோ பேகன் துமக்கு என்ன உறவினனே அழுது சிற்பதற்கு என்னையோ காரணம் என்றெலாம் வினவி ர்ை ; அதற்கு அவள், 'ஐய பேகனுக்கு யாம் உறவின ால்லேம் ; அவர், எம்போல் ஒருக்தியோடு உறவுகொண்டு நல்லூர்க்கண் வாழ்கின் ருர்,” என்று விடைகூறி வருந்தி நின்ருள்; அவள் கிலேயும், அவள் அளித்த விடையும், அதை அளித்த முறையும், அவள் பேகன் பெருக்கேவி என்பதை உணர்த்தின ; பெருங் கொடைவள்ளல் எனப் போற்றற்குரிய பேகன் பிழையுடையான் என்பதறிந்த புலவர் பெரிதும் வருந்தினர்; தம் வறுமைதி அவனிடம் பொருள் பெற்று மீள்வதினும், அவனே நல்வழிப்படுத்தி 'அவன் மனைவி நல்லாளோடு வாழச்செய்வதே தம் முன் னிற்கும் பணியெனத் துணிந்தார் ; கம் வறுமையை மறந்தார் ; பேகன் வாழ் நல்லூர் சென்ருர் ; பேகனைக் கண்டு பாராட்டினர் ; பாராட்டிய புலவனுக்குப் பரி சளிக்க முனைந்தான் பேகன்; அந் நிலையில், பேக! எமக் குப் பரிசில் அளிக்க விரும்புவையாயின் யாம் வேண்டும் பரிசிலேயே அளித்தல்வேண்டும் , யாம் வேண்டும் பரிசில் பொன்னும் பொருளும் அன்று ; கின் பிரிவால் வாடிப் பொலிவு குன்றிகிற்கும் கின் மனேவி நலம் பெறுமாறு நீ இன்னே கின் மனே செல்லுதல்வேண்டும்; அதுவே எம் பரிசிற் பொருள்,' என்று கூறினர் ; அவனும் பெருங்குன்றார் கிழாரும் பிற புலவர்களும் உாைத்த உரைவழி ஊர்போய் வாழ்ந்தான். வறுமையால் வாடி அது தீாப் பொருள் வேண்டி வந்த புலவர், அதை மறந்து பிழைத்தாரைத் திருத்தும் பெரும்பணி மேற்கொண்டார்