பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருங்குன்றார் கிழார் 127 ன்னின், அவர் அருள் உள்ளத்தை எவ்வாறு பாராட்டு సి - - வது : 'கன் முழை அருவிப் பன்மலை நீந்திச் சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததைக் கார்வான் இன்உறைதமியள் கேளா, - நெருகல் ஒருசிறைப் புலம்புகொண் டுறையும் அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை நெய்யொடு துறந்த மையிருங் கூந்தல் மண்ணுறு மணியின் மாசற மண்ணிப் புதுமலர் களுல, இன்று பெயரின், அதுமன் எம்பரிசில் , ஆவியர் கோவே P (புறம்: க ச எ) பேகன்பால் பொருள்பெறச் சென்று, அது பெரு து, அவனே அறவழிப்படுத்திவரும் பெருங்குன்றார் கிழார், தம்மால் ஒரு வள்ளல் குடி வாழ்கிறது என்று ஒருபால் மகிழ்ச்சியும், மனேயில் மக்களும் மனேவியும் வறுமையால் வாடுவரே அவர்க்கு வழியென்ன செய்வேன் என்று ஒரு பால் வருத்தமும் கொண்டு வழி நடந்து வருவாராயினர்; ஊருள் நுழைந்து தம் இல் இருக்கும் இடம் சென்று நோக்கியக்கால், ஆங்கு முன்னிருந்த சிறுகுடில் காணப் பெருத பெரும்னே ஒன்றிருப்பது கண்டு நம் வீடு இருப் பது ஈண்டல்லபோலும் என எண்ணி அப்பாற் செல்வர் மாயினர்; அந்நிலையில், அப்பெருமனேயுள்ளிருந்த அவர் மனேவியார் அழைக்கும் குரல் கேட்டுத்திரும்பி அவ்வீட்டி லுட் சென்ருர்; ஆங்கு பொன்னும் பொருளும், கெல்லும் மணியும் மண்டிக்கிடப்பக்கண்டு ஒன்றும் புரியாராய் கின் ருர். அப்போது அவர் மன்ே வியார், இவையெல்லாம் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையின் கொடைப் பொருட்களாம்; அவன் கினக்கு ஒன்றும் அளியான் போல் காட்டி, நீ அறியாவாறு, முப்பத்தீராயிரம் காண மும் கொடுத்து, ஊரும், மனேயும் வளமிகப் படைத்து, ஏரும் இன்பமும் இயல்வாப் பரப்பி, எண்ணற்காகா அருங்கல வெறுக்கையும் அளித்துளான்.” என்று அறிவித்தார். -