பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 கிழார்ப் பெயர்பெற்றேர் இளஞ்சோலின் பெருஞ்செயல் அறிந்த புல்வர் பெருங்குன் றார் கிழார், அவனே நேரிற் கண்டு பாராட்ட விரும்பி, விரைந்து சேர நாடடைந்தார்; அவன் பீடும் பெருமையும் எல்லாம் பாருளோர் அறியும் வண்ணம் பத்துப்பாடல்கள் பாடிப் பாராட்டினர் ; அப்பாக்களில் அவன் வெற்றியும் கொடையும் விளங்கப்பாடினர்; அன் பும், அறிவும் ஆற்றலும் விளங்க வாழ்த்தி வணங்கினர். 'நல்லிசை நிலைஇய கனந்தலே உலகத்து இல்லோர் புன்கண் சீர நல்கும், நாடல் சான்ற நயனுடை நெஞ்சின் பாடுநர் புரவலன்' (பதிற்: அசு) என அவன் கொடைச் சிறப்பினேயும், - "ஈரம் உடைமையின் ேோார் அனையை, அளப் பருமையின், இருவிசும்பு அனையை, கொளக்குறை படாமையின் முந்நீர் அனையை, பன்மீன் நாப்பண்திங்கள் போலப் பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை” (பதிற்: க.) என, அவன் அன்பு, அறிவு, அருள், சுற்றம் போற்றலாம் பண்பு ஆகியவற்றையும் பாராட்டி, 'பாடிக் காண்கு வந்திசின் பெரும! பாடுகர், கொளக் கொளக் குறையாச் செல்வத்துச், - செற்ருேர், கொளக் கொளக் குறையாத் தானேச், சான்ருேர் வண்மையும் செம்மையும் சால்பும் மறனும் புகன்று புகழ்ந் தசையா நல்லிசை நிலந்தரு திருவின் நெடியோர் நின்னே' (பகிற்று: به وی( - 6, அவன் பண்புகளைக்கான விரும்பிவந்த தன் வருகை யின் காரணத்தையும் கூறி மகிழ்ந்தார். இரும்பொறை யும், பெருங்குன்றார் கிழாரும், அரிய நண்பர்களாய்ப் பெருக வாழ்ந்திருந்தனர். - -