பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடo. பொதும்பில் கிழான் வெண்கண்ணனுர் வெண்கண்ணளுர் என்ற இயற்பெயருடைய இவர், பொதும்பில் என்ற ஊரில் வாழ்ந்து, கிழான் என்ற சிறப்புப்பெயர் பெற்று விளங்கினர் ; பொதும்பில், பாண்டிகாட்டு ஊர்களுள் ஒன்று மதுரைத் தாலுகா வில், பொதும்பு என வழங்கும் ஊரே, இவ்வூராம். வேங்கைமத்தின் கிழலில், தன் கன்ருேடு தங்கி யிருக்கும் ஆமான், நன்கு உறங்குவதறிந்த மக்கி, கன் பின்னே ஆரவாரம் செய்துகொண்டு தொடர்ந்து வரும் தன் இனக் குரங்குகளை ஒலிசெய்யாதிருக்குமாறு கையால் அடக்கிவிட்டு, மெல்ல மெல்ல அவ் ஆமான் அருகேசென்று, அதன் மடியை ஈர்த்து, அதனினின்.அம் கறந்த பாலைத் தன் குட்டியின் கையில் கிறையப் பிழியும் என்ற ஒவியம் உள்ளுதொறும் நயம் பயந்து உயர்ந்து விளங்குகின்றது. 'தடங்கோட்டு ஆமான் மடங்கல் மாகிாைக் - குன்ற வேங்கைக் கன்ருெடு வதிக்தெனத் துஞ்சுபதம்பெற்ற துய்த்தலே மக்கி, கல்லென் சுற்றம் கைகவியாக் குறுகி, வீங்குசுாை ளுெமுங்க வாங்கித், ம்ேபால் கல்லா வன்பறழ்க் கைக்கிறை பிழியும்.” (கற் நி)ை ‘யாம் காத்துவந்த தினப்புனம், கொய்த கதிரைக் கொண்டு செல்லமாட்டாமல் கிளிகள் கீழே போட்டு விட்டுப்போம் அளவு கணங் கொள்ளுமாறு கதிர் முற்றி விட்டது ; ஆதலின் யாம் இற்செறிக்கப் பெறுவோம் ; இல்லில் வங்து தலைவியைக் கண்டு அன்பு பாராட்டிச் செல்ல எண்ணுவையாயின், மலை முழைஞ்சுகளில் நழைவந்த அருவிகள் அடித்துக்கொண்டுவரும் அாவுமிழும் மாணிக்கங் கள், எம் சிறுகுடி உள்ள தெருவெலாம் தோன்றுமாறு இருள்போக்கிப் பேரொளிவிடும் ஆதலின் இரவில் வரு கலும் இயலாது; அதனுல் இவளும் வருங்துவள் ; ஆதலின் வரைந்துகொள்ள வேண்டுவன மேற்கொள்வா