பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூக. பொதும்பில் கிழார் மகனுர் வெண்கண்ணியார் - பொதும்பில் கிழான் வெண்கண்ணனர் என்பாரின் மகன் வெண்கண்ணியார் என்ற இயற்பெயருடையார் ; சில குடிகளில் தலைமகனுக்குத் தந்தை பெயரை இடுவது வழக்கம் என்ப ; அவ்வாறே இவர் பெயரும் வெண்கண்ணி யார் என வழங்கிற்றுப்போலும் ; சில இடங்களில் இவர், இயற்பெயரோடு இணைந்து வழங்கப் பெருமல், பொதும் பில்கிழார் மகளுர் என்ற அளவிலேயே வழங்கப் பெற்றுளார். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாசறை வாழ்க்கையினையும், மின்னலைப்போல் ஒளிவிடும் அவன் வாட்படையின் சிறப்பினையும் போற்றிக் கூறி யுள்ளார். 'செருவிறந்து ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த வேல்கெழுதானைச் செழியன் பாசறை உறைகழி வாளின் மின்னி.” (ாற் : க.அஎ) முழுத்திங்கள் ஒளிவிடும் இரவில், கடல் கரைகளே அழிக்க எழுவதே போல் அலேபல எடுத்து எழும்பி ஆா வாரிக்கும் எனக்கூறிய இயற்கையின் இயல்பும், 'பெருங்கடல் இாவுத்தலே மண்டிலம் பெயர்ந்தென, உாவுத்திரை எறிவனபோல வெரூஉம்’ (நற் : கூஎடு) நீர்நிலைவாழ் மீன்தேடி உழலும் நாரைகள், புன்னேயின் மகரந்தம் உதிருமாறு, அக்கிளேகளின்மீது அமர்ந்து அக் கிளைகளை அணிசெய்யும் எனக் கூறும் இயல்பும் அழகாக அமைந்துள்ளது. 'டுேசினைப் புன்னை நறுந்தாது கிரக் கோடுபுனை குருகின் தோடு” (நற் : க.எடு)