பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.ச. மதுரை மருதங்கிழார் மகனுர் பெருங்கண்ணனுர் - பெருங்கண்ணனர் பாடிய பாக்கள் இரண்டினுள், நெய்தல் திணை தழுவி வந்த பாட்டில், கடல்வேட்டம் உடையாாய பாதவர், திண்ணிய படகில் வலிய வலைகளை யும், பலபுரி சேர்த்து முறுக்கிப்பெற்ற பெருங்கயிற்று துனியில் கட்டப்பெற்ற திமிங்கிலத்தை எறியவல்ல பெரிய ஈட்டிகளையும் வைத்துக்கொண்டும் பேரொளிதரும் விளக்கு களைக் கொளுத்திக்கொண்டும் இரவின் நடுயாமத்தில் கடல் மேல் சென்று, மீன்களை நிறையக் கைக் கொண்டு, விடியற் காலையில் கரையேறி, கடற்கரைச் சோலைகளில், புன்னை மாத்தின் கிழலிலே அமர்ந்து தம் சுற்றத்தோடும் மது அருந்தி மகிழ்ந்து வாழ்வர் என நெய்தல்கில மக்களின் தொழிலை நன்கு எடுத்துக் காட்டியுள்ளார் : நோன்புரிக் கயிறு கடையாத்த கடுகடை எறியுளித் திண்திமில் பரதவர் ஒண்சுடர்க் கொளி.இ நடுநாள் வேட்டம் போகி, வைகறைக் கடல்மீன் தந்து கானல் குவைஇ ஓங்கிரும் புன்னை வரிநிழல் இருந்து தேங்கமழ் தேறல் கிளையொடு மாந்திப் பெரிய மகிழும்.” )5,پہلے ہوئی۔5] : غ(