பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடு. மருங்கூர்கிழார் பெருங்கண்ணனுர் மருங்கூர், மருங்கூர்ப்பட்டினம் என்ற ஊர் பாண்டி காட்டில் உள்ளது ; திருவாடானைத் தாலுக்காவில் ஒரு மருங்கூர் உளது. மருங்கூர்ப் பட்டினம் ஒரு கடற்கரை நகரம். அதற்கேற்ப, அவ்வூரினாாய இவர் நெய்தல் கிணே பற்றியே பாடியுள்ளார். சுருவும், முதலையும் கிறைந்து கொடுமை மிகுந்த கழிகளைக் கடந்து இரவிலே வரும் தலைவனுக்கு ஏதம் உண்டாம் என அஞ்சிய தோழி, அவன் இாவில் வருதலைத் தடை செய்ய விரும்பி, 'ஐய! நாங்கள், எங்கள் தந்தையர் கொணர்ந்த மீன்களை உலர்த்தி, அவற்றை உண்ணவரும். பறவைகளை ஒட்டிக்கொண்டு இருப்போம். ஆதலின், எங்களைக் காண்டல் அரிதன்று ; ஆகவே, இனி இரவில் வருதலைவிட்டு, பகலிலேயே வருவாய்ாக” என வேண்டும் பரதவர்குல மகளிரின் மனப் பண்பைப் பாட்டாக ஆக்கி அளித்துள்ளார் பெருங்கண்ணனர். ' கொடுந்தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும் இருங்கழி இட்டுச் சுரம்நீந்தி, இரவின் வந்தோய் மன்ற தண்கடற் சேர்ப்ப ! நினக்கெவன் அரியமோ ? யாமே, எங்தை புணர்திரை பாப்பகம் துழைஇத் தந்த பன்மீன் உணங்கற் படுபுள் ஒப்புதும்: புன்னையங்கானல் பகல் வந்தீமே.” (அகம்: அ0)