பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூசு. மாங்குடி கிழார் மாங்குடி கிழார், மாங்குடி மருகனுர், மதுரைத் காஞ்சிப்புல்வர், காஞ்சிப்புலவர் என்ற பெயர்கள் எல்லாம் ஒரு புலவரையே குறிப்பனவாம். புலவனும், போர்வல்ல வலுமாய தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன், தன் காட்டை மாங்குடி மருதனர் பாடுவதைப் பெருமைக்குரியதாக மதித்தான் எனின், மாங்குடி மருத ஞரின் புகழினே என்னென்பது ? மாங்குடி மருதனர், சோழநாட்டில் பிறந்தவர் என்ப; தஞ்சை ம்ாவட்ட்த்தில் திருக்கருப்பூண்டிக்கண்மையில் உள்ள மாங்குடி, மருதவனம் என்ற இரண்டு ஊர்களில் முன்னேயதை மாங்குடி கிழார் பிறந்த ஊராகவும், பின்னே யதை, அவர் பெயரால் எழுந்த ஊராகவும் கருதுவர் சிலர். மாங்குடி மருகனுர், தம் காலத்தே போசு ஒச்சிய வேந்தனுக விளங்கிய தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் அவையில், புலவர் பலர்க்கும் தலைவராய் வீற்றிருந்தார். இத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் வரலாறும், வெற்றியும் முன்னமே தொகுத்துாைக்கப்பட்டுளது. பாண்டியன் நெடுஞ்செழியன், இளையன் என்று எண்ணி என்னை எதிர்த்த பகைவர்களை அழிக்காது மீள்வேனுயின், மாங்குடி மருதன் முதலாம் புலவர்கள் என் காட்டைப் பாடாது விடுவாராக” என்று கூறிய வஞ்சினத்தால், மாங்குடி மருதனர், தம் பாண்டிப் பேராசையும், அப்பேரரசின் தலைநகராம் மதுரைமா நகரை யும் பாடுவதைப் பெரிதும் விரும்புகின்ருன் நெடுஞ் செழியன் என்பது புலம்ை. ஆகவே, அவன் பாடுக என்று வேண்டிக்கொண்டதற்கேற்பவும், போர்பல கண்டு,