பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ங்.எ. மாடலூர் கிழார் இப் புலவர்க்குரிய மாடலூர் யாண்டுளது என்பது அறியக் கூடவில்லை; குறிஞ்சித்திணையில், இரவுக் குறிக்கு இசைந்து வந்துகிற்கும் தோழியிடம், தன் இசைவினையும் அறிவிக்கும் தலைமகள் கூற்றமைந்த ஒருசெய்யுளேப் பாடி யுள்ளார்; அது குறுந்தொகைக்கண் இடம்பெற்றுளது. அதில், குறிஞ்சி நிலமக்கள், தங்கள் கினைப்புனங் களைக்காத்து கிற்போர், யானேபோன்ற கொடிய உயிர்க ளால் அழிவுருதிருத்தற் பொருட்டும், தம் பெரும்புனங் களே ஆங்கிருந்தவாறே கண்டு காத்தற்பொருட்டும், பெரு மலைகள் மீதும், உயரிய மரங்கள்மீதும் பாண் அமைப்பர்; இரவில் ஒளிபெறுதற்காகவும், ஒளிகண்டஞ்சும் யானைகளே எளிதில் ஒட்டுவதற்காகவும், அப்பாண்களில் பந்தங்களைக் கொளுத்கிவைப்பர்; பாண்கள், அக்குறிஞ்சி கிலம்முழுதும் பரவியிருப்பதால், இரவில் ஆங்காங்கே தோன்றும் அப் பங் தங்களின் ஒளிகள், வானத்து மீன்களைப்போல் காட்சி யளிக்கும் என்ற செய்திகளைத் தெரிவித்துள்ளார். சேனேன் மாட்டிய நறும்புகை ஞெகிழி வான மீனின் வயின் வயின் இமைக்கும் ஒங்கு மலே காடு” (குறுக் கடு)