பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 கிழார்ப் பெயர்பெற்ருேர் களால், அவ்வூர்களின் இருப்பிடத்தை உள்ளவாறு அறிந்துகொள்வதிலும், அவ்வூர்ப் பெயர்களுக்கான கார ணங்களை அறிந்துகொள்வதிலும், பிற்காலத்தார்க்கு ஐயங் கள் பல தோன்றும். அத்தகைய ஊர்களுள் இவ் அரிசி லாறும் ஒன்று. அரிசிலாறு எது என்பதை அறியமாட்டாது இக்கால அறிஞர் பலரும் மயங்குகின்றனர். அயல், அசல் என்ற சொற்களில், சகரமும் யகரமும் மயங்குவதைப்போல், அரி யில் என மாறி வழங்கியிருத்தலும் கூடும், என உட் கொண்டு திருச்சி மாவட்டத்தில் கொள்ளிடத்தின் வட பால் உள்ள அரியில் அல்லது அரியிலுரே அரிசிலுராம் என்பர் சிலர் ; மைசூர் நாட்டில் உள்ள அரிசிற்கரை என்ற ஊரே அரிசிலுராம் என்பர் வேறு சிலர் , தஞ்ச்ை மாவட் டத்தில் கும்பகோணத்திற் கணித்தேயுள்ள கல்வெட் டொன்று, அரிசிலுரைக் குறித்துக் கூறுகின்றது (Annual Report on Madras Epigraphy. No. 255 of 1911). ஆகவே, அரிசிலூர் சோழநாட்டுக் குடந்தை நகர்க்கு அண் மையில் இருந்த ஒர் ஊராம் என்று கூறுவாரும் உளர். இவ்வாறு, இடம் அறியப்பெருமல், பாக்களில் இடம் பெற்றுப் பெருமைவாய்ந்த அரிசிலுரிற் பிறந்து, வேளாண்மைத்தொழில் மேற்கொண்டு வாழ்ந்து வளமார் புகழ் பெற்று விளங்கி, அக்காணத்தினலேயே, இருமுது குரவர் இட்ட இயற்பெயர் மறைய, ஊர்ப்பெயரும், சிறப் புப் பெயரும் ஒருங்கே இணைய அரிசில்கிழார் என்ற பெயர்கொண்டு வாழ்ந்த புலவர், பழம்பெரும் புலவர் கள் வரிசையில் வைத்துப் பாராட்டத்தக்க பண்புவாய்க் தவாாவா. அரிசில்கிழார், அரிசில் என்ற ஊரிற் பிறந்து, அரசர் கள் அளித்த கிழார் என்ற சிறப்புப்பெயர் பெற்று விளங் கிய பெரும்புலவராவர் என்பதல்லது, அவர் வரலாறுக வரில் வேறு எதுவும் விளங்கவில்லை. அவர் பாடிய பாக்க ளுள் சில, அவர் அக்கால அரசர் சிலரோடு கொண்டிருந்த