பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.அ. மாற்றுார்கிழார் மகனுர் கொற்றங் கொற்றனுர் சோழநாட்டில், காவிரியாற்றங்கரையில் உள்ள சிறுகுடி என்ற ஊரின் கண் இருந்த பண்ணன் என்பவன், பேரரசர்க்குப் படைத்துணைபோகும் பெருவீரனுய்த், தம்மை நாடிவரும் இரவலர்க்கு வறுமைபோக வழங்கிப் 'பசிப்பிணி மருத்துவன்' என்ற சிறப்பும் பெற்று விளங் கின்ை; அவன் சிறுகுடி நெல்லி மரங்களால் நிறைந்தது என்றும், நெல்லிக்கனி கின்று நீர்குடித்தால் இனிக்கும் என்றும், அவன் வாழ்வது பிறர்வாழ வேண்டியே யன்றித் தான் வாழ அன்று என்றும் பாராட்டினர்: 'தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன் பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண்ணிலைப் புன்காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர் நீர்குடி சுவை' (அகம்: டுச) நாடுகாவல் கருதிப் பிரிந்து சென்ற தலைவன், தன் வினே முடித்துகின்று, மகனே ஏந்திக்கொண்டு, ஒளிவிட்டு விளங்கும் மதியே ,ே ஐம்படைத்தாலி அணிந்த என் மகன் அழைப்பதை ஏற்று வருவையாயின் கினக்குப் பால் தருகின்றேன்' என்பன போன்ற இனியசொற்களைக் கூறிக்கொண்டே, மகனுக்குத் திங்களைக் காட்டி, விரல் அசைத்து அழைக்க அவனுக்குக் கற்றுத்தந்து அவன் பாலுண்ண விரும்பும் விருப்பத்தை மாற்றமுயலும் தன் மனைவியை கினேந்து விரைந்து செல்லுமாறு பாகனே வேண்டினன் என்று பாடியதிறம் படித்து இன்புறற்குரிய தா.ம. 'தீவிய கிழற்றி, "முகிழ் நிலாத் கிகழ்தரும் மூவாத்திங்கள் ! பொன்னுடைத்தாலி என்மகன் ஒற்றி வருகுவை யாயின் தருகுவன் பால் என விலங்கமர்க் கண்ணள் விரல்விளி பயிற்றித் திதலை யல்குல் எம் காதலி புதல்வம் பொய்க்கும் பூங்கொடி கிலேயே’ (அகம்: இச)