பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சo. வடமோதங்கிழார் தொண்டைநாட்டில், சித் து ர் மாவட்டத்தில், சீகாளத்தி திருத்தணிகை வட்டங்களில் மாதம் என்னும் ஒர் ஊர் உளது; அது பண்டை நாளில் மோதம் என வழங்கியதாக அரசியல் ஏடுகள் அறிவிக்கின்றன; மதுரை மாவட்டத்திலும் மோதம் எனப் பெயருடையதோர் ஊர் உளது. ஆதலின் இது வடமோதம் என வழங்கப்பட்டது; இவ் வடமோதமே நம் புலவர்க்குரிய ஊர் என்று கூறுவர். பகைவர் கவர்ந்து சென்ற ஆனிரைகளே மீட்டுக் கொண்டு வந்த வீரன் ஒருவன், அம்மீட்சிப்போரில் பெற்ற புண்ணுல், ஊர்க்கோடியில் வருவுழி, வருக்கி வீழ்ந்து இறந்தாகை, அவன் பெயரும், பீடும், பெருமை யும் பொறித்த கல்லை நாட்டி மயிலும் மலரும் சூட்டி வழி படும் நிகழ்ச்சியை நெஞ்சுருகப் பாடியுள்ளார். ... • எண்ணிய எண்ணியாங்கெய்துப எண்ணியார் • * திண்ணிய ராகப் பெறின் ' (திருக் : சுசுசு) என்ப; உள்ளத் தூய்மையும் உறுதியுமுடையோர், ஒன்றை விரும்பி கினைப்பாராயின், அவர் கினைந்தது வந்து சேரும் என்று கூறுவர் ; இவ்வுண்மையினைப் பிரிந்து சென்ற தலைவன் விரைந்து வருக என வேண்டிய தோழி, அவன் அவ்வாறே வந்தமை அறிந்து, தலைமகள்பால் சென்று, நாம் கினைந்தவாறே தலைவர் கில்லாது வந்து சேர்ந்தார் என்று உரைப்புழி உரைத்துள்ளார். ' கினைந்தனம் இருந்தனமாக, நயந்தாங்கு உள்ளிய மருங்கின் உள்ளம் போல. • , x' வந்து கின்றனாே காதலர். ’. (அகம்: க.க எ) - கி. பெ.-10 W