பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 கிழார்ப் பெயர்பெற்ருேர் அவன் சிறப்பெலாங்தோன்றப் பாக்கள் பல பாடிப் பாராட்டி வாழ்வாராயினர். 13 ஒரு நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் ஒன்று முற்றும் அறிந்தவராகவோ, அன்றி முற்றும் அறியாதா ாாகவோ இருத்தல் இயல்பன்று : ஒரு சிலநாட்டில் ஒரு சிலர் அறிந்தாராக, ஏனேயோர் அறியாதாராக இருப்பதும், வேறு சிலகாட்டில், மிகப் பலர் அறிந்தாராக, எஞ்சியோர் அறியாதாராக இருப்பதும் உலகியற்கை உலகியலின் இவ்வியல்புணர்ந்து, மக்கள் தம் அறிவும், அறியாமையும் எண்ணிப்பார்த்து, அறிவுடையாரைத் தழுவிக்கொண்டு அவர்வழி ஆட்சி மேற்கொள்வதையும், அறியாதார் அறிவு திருந்த ஆவன மேற்கொள்வதையும் அரசர்கள் சும் கடனுகக்கொள்ளுதல் வேண்டும். நல்லரசின் பண்பு இது. இக் கப்பண்பு, பெருஞ்சேரலாதன்பால் சிறந்து விளங்கும்; அவன்மாட்டு இந்தப் பண்புகிலே பெற்றிருப்பதாலேயே, அவன் கீழ்வாழ் உலகம் கின்று நிலைபெறுகிறது என்று பாராட்டினுள் : ' உாவரும் மடவரும் அறிவுதெரிக் தெண்ணி அறிந்தனை அருளா யாயின் பாரினண் நெடுந்தகை வாழுமோாே (பதிற்றுப்: எக) சுடர்விளக்காயினும் நன்ருய் விளங்கிடத் துண்டு கோல் ஒன்று வேண்டும் என்ப. நற்குடிப்பிறப்பும், நாடாள் அறிவும் நன்கு வாய்க்கப்பெற்று, šť பழுதெண்னும் மந்திரியின் பக்கத்துள் தெல்ஒர் எழுபது கோடி புறும் ” (குறள்: சுகூக) என்பவாதலின், அரசர்க்கு என்றும் நல்லனவே எண்ணும் பண்பு கொண்டுவிளங்கும் அமைச்சர்களைப் பெற்றிருத் தல் நல்லாட்சிக்கு நற்றுணையாம் ; அக்காடாட்சி நன்கு நீளும், அரசன் நல்ல அமைச்சர்களைப் பெற்றிருக்கவே நலமெலாம் பெருகும் எனின், அவ்வமைச்சர்பால் அமைந் திருக்கும் அருங்குணங்கள் அனைத்தும், அவ்வரசனிடத்தி