பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிசில்கிழார் 17 மக்களைப் பெறுவதையும், பிறந்த மக்கள் மாண்புடைய ாதலையும், பெறற்கரிய பேறுகள் அனைத்தினும் சிறந்த பேறுகளாக மதிப்பர். பெருஞ்சோலாதன் இதிலும் குறை யுடையானல்லன் ; இயற்கையறிவோடு கூடிய செயற்கை யறிவும், சால்பு, செம்மை என்று சொல்லப்பெற்ற, சான்றேர்பால் இருக்கவேண்டிய குணங்களும் நிறைந்து, நாடாளும் நல்லறிவும் நன்கு வாய்க்கப் பெற்ற தன் மகனைப் பெற்றவன் பெருஞ்சேரலாதன் ; அவன் புகழைப் புலவர் பாடி மகிழ்வதில் வியப்புண்டோ? ‘ ஈசறிவு புரிந்து சால்பும், செம்மையும் உளப்படப் பிறவும் காவற் கமைந்த அரசு துறை போகிய வீ.ஐசால் புதல்வம் பெற்றனை (பதிற்றுப் பத்து : எச.) குணங்களால் கிறைந்த குன்றென கின்ற பெருஞ் சேரலாதன், போர் அறிவும், அதற்கேற்ற போாண்மையும் நன்கு வாய்க்கப்பெற்று விளங்கின்ை ; அவன் படையின் பெருமையினேயும், அதன் அருமையினையும், அப்படைக் துணை கொண்ட அவன் பேராண்மையினேயும், அகனல் அவன் பெற்ற வெற்றிச் சிறப்புக்களையும், அவன் ஆற்றல் அறியாது எதிர்த்த அவன் பகைவர் பட்ட பாட்டினேயும் புலவர் பலவாறு பாராட்டி மகிழ்ந்துள்ளார். சேரலாதன் படையில் உள்ள தேர் எத்தனை 'குதிரை எத்தனே ? வீரர் எத்தனை என்பார்க்கு விடையாகப் புலவர் அரிசில்கிழார், அவற்றை எண்ணிக் கணக்கிட்டுக் கூறல் எவர்க்கும் இயலாது ; ஆகலின், அவற்றை யானும் எண்ணிப் பார்த்தேனல்லன் ; ஆயினும் ஒன்று கூறு கின்றேன் ; அதைக்கொண்டு அவன் படையின் பெருமை. யினை ஒருவர்ணு உணர்ந்து கொள்ளுதல் கூடும் ; அவன் நாட்டில், மாடுமேய்த்தல் தொழில் மேற்கொண்ட கொங்கர் என்பார் ஒரு இனத்தாருளர்; அவர்களிடத்தில் பெரும் திரளான மாடுகள் உள. அக் கொங்கர்பலரும், தங்கள் மாடுகளை ஒன்று சேர்த்து மேய விடுதல் வழக்கம்; அக்காலை கி. பெ.-2 -