பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 கிழார்ப் பெயர்பெற்ருேர் பெரியோர்ப் பேணிச் சிறியோரை அளித்தி; நின்வயிற் பிரிந்த கல்லிசை கனவினும் பிறர்நசை யறியா , வயங்கு செந்நாவின் படியோர்த் தேய்த்த வாண்மைத், தொடியோர் தோளிடைக் குழைந்த கோதை மார்ப ! அனைய அளப்பருங் குாையை.' (பதிற்று: எக.) பாக்கள் பல புனேந்து, தன் புகழ்பாடிய புலவர் அரிசில் கிழாரின் அறிவுகலம் கண்டு வியந்த பெருஞ்சோலிரும் பொறை, அவர்க்கு ஒன்பது நாமுயிரம் காணம் நல்கிய தோடு அமையாது, அரசமாதேவியாரோடும், அரண்மனை விட்டு வெளியேறி நின்று, புலவரை அழைத்து, இவ்வரண் மனேயும், ஆட்சிப்பொறுப்பும் இனி சின்னுடைமையாம் ஏற்றருள்க என வேண்டி கின்ருன்; அரசன் அன் புள்ளத்தை அறிந்த புலவர் பெருந்தகையாரும், அவன் விரும்பியாங்கே, அவற்றை ஏற்றுக்கொண்டு அடுத்த கனமே, அரசே! என் உடைமையாகிய இவ்வாட்சியினை நினக்கு யான் அளிக்கின்றேன்; ஏற்றருள்க,” என, வேண்டி அளித்து அகமகிழ்ந்தார் , அரசனும், புலவனும் வளர்த்த அன்புத் தொடர்பின் சிறப்பே சிறப்பு ! அதியமான் தகடூரை அழித்து வெற்றிபெற்ற சோ வேந்தன் அவைக்களப்புலவராய அரிசில் கிழார், அவன் பகைவனும் அத்தகர்ேப்போரில் அவனுல் அழிவுற்ருே அனும் ஆய எழினியின் பிரிவு கண்டு மனம்மிக இாங்கி அழுது பாராட்டியுள்ளார். அவர், அவன் ஆண்ட தகடூர், அத்தகரிேல் அவன் மேற்கொண்டிருந்த ஆட்சி, அவன் பிரிவு கண்டு பொருது பொருமிஅழும் அவன் குடிகள் அவன் மாட்டுக் கொண்டுள்ள அன்பு, அவன் ஆண்மை ஆய பலவற்றையும் அழகாகப் பாடியுள்ளார் : "வாழ்க்கைக்கு வேண்டும் பயன்கள் முற்றும் நிறைந்த ஊர்கள் பல நிறைந்தது அவன் நாடு ; வெற்றியல்லது தோல்விகண்டறியா ஆண்மை நிறைந்தவீரர், போரில் தாம் பெறும் வெற்றிப் புகழ் அல்லது அதற்குக் கைம்மாருகப்