பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிசில்கிழார் 21 பெறும் கூலியை எண்ணிப் பாராமல் காத்து கிற்கும் காவற்காட்டையுடையது அவன் தகடூர்,” எனத் தகரிேன் கவினும், காவலும் விளங்கப் பாராட்டினர் : 'பல்பயன் நிலைஇய கூறுடை வைப்பின் வெல்போராயவர் மறம் புரிந்து காக்கும் வில்பயில் இரும்பின் தகர்ே? (பதிற்று: எஅ) காட்டிற் சென்று மேயும் ஆனிரைகள், அங்கே தமக்கு ஊறு செய்யும் பகைவிலங்குகள் இல்லாமையால், மேய்ந்து மாலைவந்ததும், வீடுகோக்கி வருவதொழிந்து தம் கன்றுகளோடு அக் காட்டிலேயே தங்கும்; நடந்து கடந்த வெந்த காலுடைய வழிப்போவார், வழி ஆறலை கள்வர் அற்றது ஆகலின், அவர் அலைப்பரே என அஞ்சி அரண் அமைந்த இடம் தேடி ஒடி ஒளியாமல், தாம் விரும் பும் இடங்களிலே இருந்து இளேப்பாறுவர் ; களத்தில் குவிக்க நெல் முதலாம் குவியல்கள், நாடு கள்வர் அற்றது ஆகலின், காப்பார் எவரையும் பெருமல் தனித்தே கிடக் கும்; என அகப்புறப் பகைகளைக் கடிந்து ஆளும் அவன் ஆட்சிச் சிறப்பைப் பாராட்டினர் : ' கன்றமர் ஆயம் கானத்து அல்கவும், வெங்கால் வம்பலர் வேண்டுபுலத்து உறையவும், களமலி குப்பை காப்பில வைகவும் விலங்குபகை கடிந்த கலங்காச் செங்கோல் ’ (புறம்:உகட0) எழினி இறந்தான் என்று கேட்ட அவன் நாட்டு மக்கள், பெற்றுப் பாலூட்டி வளர்க்கும் தாயை இழந்த சேய் எவ்வாறு எங்கித் துன்புற்று அழுமோ, அதைப் போல் அழுது அாற்றினர் என்று அவனுக்கும், அவன் குடிகட்கும் உள்ள அன்பின் தொடர்பினைப் பாராட்டினர் : 'பொய்யா எழினி பொருது களம்சோ ஈன்ருேள் நீத்த குழவிபோலத் தன்னமர் அற்றம் தலைத்தலே இணைய' (புறம் : உக.0.).