பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 கிழார்ப் பெயர்பெற்ருேர் எழினியின் உயிர்குடித்த கூற்றமே ! நீ சிறிதும் அறிவற்றவன் ஆயினே ; உழவன் பசித்துயர் வந்து ற்ற காலையும், நிலத்தில் விதைக்க வைத்திருக்கும் விதையினை உண்ணுது வைத்துப் பேணி, பின்னர் விதைத்து, அவ் விதையினும் பன்மடங்கு, பெற்று மகிழ்வதேபோல், ே எழினியின் ஒர் உயிரைமட்டும் உண்ணுது விட்டிருப்பை யாயின், இவனைத் துணையாகக் கொண்டு இவன் பகைவர்க ளின் பல உயிர்களை அவன் கொண்டுதரப்பெற்று உண்டு பசியாறியிருப்பை பன்னுள் ; ஆணுல், அந்தோ அப்பேற் றினே இழந்துவிட்டனேயே ; இவனேக் கொன்றதால் பெரு நட்டம் உற்ருேன் நீ ஒருவனே யன்ருே என்னே கின் பேதைமை !' என்று கூறி எழினியின் ஆற்றலை எடுத்துக் காட்டி அழுது பாடியுள்ளார் : -

  • நோய் உழந்து வைகிய உலகினும் மிகானி

யிேழந்தனையே அறனில் கூற்றம்! வாழ்தலின் வரூஉம் வயல்வளன் அறியான் வீழ்குடி உழவன் வித்துண்டாஅங்கு ஒருவன் ஆருயிர் உண்ணு யாயின் நோர் பல்லுயிர் பருகி ஆர்குவை மன்னே அவன் அமாடு களத்தே ’ (புறம்:உக.0.) அரிய அழகிய பாக்கள்.பல புனேயும் பண்புவாய்ந்த அரிசில் கிழார்பால் பாராட்டத்தக்க பண்புகள் பலவும் பொருந்தியிருந்தன ; அரிசில் கிழார், அரசரை அடைந்து, அவர் புகழ்பாடி, அவர் அளிப்பன ஏற்று வாழ்வதொன்றே புலவர் கடன் என எண்ணும் குறுகிய உள்ளமுடையவ ால்லர் ; அவர் தம்மால் பாராட்டப்பெறும் தலைவர்கள் போற்றத்தக்க பண்புடையராதல் வேண்டும் என்று எண் அணும் பேருள்ளமுடையவராதலின், அத்தகைய தலைவர் கள் தவறிய வாழ்க்கையினராயின், அவர்பால் அமைந்து கிடக்கும் அத்தவற்றினே எடுத்துக் காட்டித் திருத்தி அவர் நல்வாழ்வு வாழச் செய்வது புலவர்தம் கடனும் என்று எண்ணும் இயல்பினராய்க் காட்சியளிக்கின்ருர் ; அரிசில்கிழார்பால் அமைந்து கிடக்கும் இப்பண்பு, அவர்