பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 கிழார்ப் பெயர்பெற்ருேர் ' கெல்லின் அம்பன அளவை உறைகுவித் தாங்குக் கடுந்தேறு உறுகிளே மொசிந்தன துஞ்சும் செழுங்கூடு ' (பதிற்று: எக.) பெருஞ்சேரல் இரும்பொறையின் போற்றல் அறி யாது பகைத்துவந்து போரிட்டு, அவளுல் துன்புற்றுத் தோற்ருேடும் பகைவர்க்கு, தம் இளமையால் அறியாது, தேன் கூட்டினே அழிக்கச் சென்று, அக்கூட்டில் வாழ் தேனீக்கள் எழுந்து கொட்டத் தொடங்கியதும் துன்புற்று ஒடும் இளஞ் சிருர்களேயும், ' செழுங்கூடு கிளைத்த இளந்துணை மகாஅளின் அலங்தனர் பெரும கின் உடற்றியோரே " (பதிற்று:எக.) பகைவர் நாட்டின் மீது படைகொண்டு சென்று, அவர் நாட்டைப் பாழ் செய்வது கண்ட பகைவர், பணிந்து திறை தந்தாராக, அதை ஏற்றுக்கொண்டு அவரை அழிக் காத விடுத்து மீளும் பெருஞ்சேரல் இரும்பொறைக்கு, மக்களைப் பிடித்துத் துன்புறுத்தி, அம்மக்கள் தம் நோய் நீங்கப் பலி கொடுத்தாராக, அவர் அளித்த பலியினே ஏற்றுக்கொண்டு அவர் உயிர்க்கு ஏதம் விளக்காது விட்டுச் செல்லும் பேயினையும், 'பலிகொண்டு பெயரும் பாசம்போலத் திறை கொண்டு பெயர்தி ' (பதிற்று: எக.) கோபத்தால் சிவந்து சுழலும் வீரன் ஒருவன் கண்ணிற்கு, ஒர் அகலில் இடப்பெற்று ஒயாது சுழலும் குன்றிமணியினையும்,

  • அகற்பெய் குன்றியிற் சுழலும கண்ணன் ’ (புறம் : கூ00.) உவமைகளாகக் கூறியுள்ள அவர் புலமை நலத்தைப் போற்றுவோமாக. - . அரிசில்கிழார் பாடிய பாக்களுள், அகத்துறைப் பொருள் தழுவிய பாடல் ஒன்றே உளது ; அவ்வொரு