பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. ஆர்க்காடுகிழார் மகனுர் வெள்ளேக்கண்ணத்தனுர் வடார்க்காடு மாவட்டத் தலைநகராகிய வேலூர்க்குக் கிழக்கே பாலாற்றங்கரையில், ஆர்க்காடு என்ற பெயரு டையதோர் ஊர் உளது ; அதன் பெயரை, ஆர்-காடு எனப்பிரித்து, ஆத்திமாங்கள் சிறைந்தமையால் இது ஆர்க் காடு எனப் பெயர்பெற்றது என்பர் சிலர், ஆறு-காடு எனப்பிரித்து, ஆறு காடுகளைக்கொண்டு விளங்கியமையால் இது ஆற்காடு எனப் பெயர்பெற்றது, இப்பெயர் வட மொழியில் ஷடாரண்யம் என வழங்கப்பெறும் என்பர் வேறு சிலர்; ஆல்-காடு எனப்பிரித்து, ஆலமரங்கள் கிறைந்தமையால் இது ஆற்காடு என அழைக்கப்பெற்றது போலும் என்பர் மற்றும் சிலர் , தமிழ் நூல்களிலும், கல் வெட்டுக்களிலும் ஆர்க்காடு என்ற படிவமே வழங்கப் பெற்றுள்ளது ; ஆர்க்காடு, சேந்தன் என்பாைெருவனு டைய தந்தையாகிய அழிசி என்பானுக்கு உரியது ; அது நெல் விளையும் கிலங்களைச் சூழக்கொண்டது என்று பழங் தமிழ் நூல்கள் பகர்கின்றன : . " சேந்தன் தந்தை அரியலம் புகவின் அந்தோட்டு வேட்டை கிாைய ஒள்வாள் இளையர் பெருமகன் அழிசி ஆர்க்காடு ? (குறுங்: உடுஅ) " சேந்தன் தந்தை தேங்கமழ் விரிதார் இயல்தேர் அழிசி வண்டுமூசு நெய்தல் நெல்லிடை மலரும் அரியலம் கழனி ஆர்க்காடு ' (நற்: க.க) இவ்வாறு இலக்கியச் சிறப்புற்று விளங்கும் ஆர்க் காட்டில் பிறந்து, அரசர்கள் பாராட்டி அளித்த கிழார் என்ற சிறப்புப்பெயர் பெற்றுப் பெருமையுற்ற பெரியார் ஒருவருக்கு மகனுய்ப் பிறந்த பேறுடையவராவர், நம் .புலவர் வெள்ளேக்கண்ணத்தனர். இத்துணையே இவர்