பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ங், ஆலத்துார் கிழார் ஆலத்துர் என்ற பெயருடைய ஊர்கள், தமிழகத்தில் பல உள. பாண்டிநாட்டில், மதரோதய வளநாட்டில் ஒர் ஆலத்தாரும், தொண்டைநாட்டில், புலியூர்க்கோட்டத்தில் ஒர் ஆலத்தாரும், பல்குன்றக்கோட்டத்தில் ஒர் ஆலத்து ரும், சோழநாட்டில் ஒர் ஆலத்துாரும் இருக்கின்றன. ஆலத்துணர்கிழார் என்ற இப்புலவர், சோழநாட்டு அரசர் களேயே பாடியுள்ளமையால், இவர் பிறந்த ஆலத்துார், சோழநாட்டில், காவிரியாற்றின் தென் கரைக்கண் உள்ள ஆலத்துராம் என்று கொள்ளலாம் ; இந்த ஆலத்துார், ஆவூர்க்கூற்றத்து விக்கிரமசோழன் போலத்துார் என்றும், தென்கரை கித்த விநோத வள காட்டு ஆலத்தார் என்றும், கித்தவிநோத வளநாட்டு ஆவூர்க்கூற்றத்து ஆலத்தார் என்றும் கல்வெட்டுக்களில் வழங்கப்பட்டுள்ளது. ஆலத்துக்கிழார், ஆலத்துாரில் பிறந்த ஒரு பெருகிலக் கிழவராவர் என அவர் பெயர் அறிவிக்கும் வரலாறும், ஆலத்துர்கிழார், குளமுற்றத்துத் துஞ்சியகிள்ளிவளவன், நிலங்கிள்ளி ஆகிய இரு சோழ அரசர்களையும், பேர் அறியாப் போர் வீரன் ஒருவனையும் பாராட்டியுள்ளார் என அவர் பாக்கள் அறிவிக்கும் வரலாறும் தவிர, அவர்பற்றிய பிறவாலாறு எதையும் விளங்க உணர்தற்கில்லை. திருமாவளவன் ஆட்சிக்குப் பின்னர், சோழநாடு இரு கூறுகளாகப் பிரிவுண்டு, சோழர் மரபைச் சேர்ந்த இரு கிளையினரால் ஆளப்படலாயிற் று, புகார் என வழங்கப் பெறும் காவிரிப்பூம்பட்டினத்தைக் கலைநகராகக்கொண்டு கடலைச் சார்ந்திருந்த நாட்டை ஒரு கிளேயினரும், உறை யூரைத் தலைநகராகக்கொண்டு, உள்நாட்டிலிருந்த நாட்டை மற்ருெரு கிளையினரும் ஆளலாயினர் ; உறையூரைத் தலை நகராகக்கொண்டு ஆண்ட சோழர்களுள் கிள்ளிவளவன் சிறப்புடையவனவன் ; கிள்ளிவளவன் என்ற பெயருடை யார் பலர் இருந்தமையாலும், இவன் தன் வாழ்வின் இறுதிக் காலத்தே, குளமுற்றம் என்ற இடத்தே இருந்து உயிர்