பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கிழார்ப் பெயர்பெற்ருேர் அவர்கள் எங்குண்டு செல்வர்; படையின் இடையில் கிற்போர் ஆண்டுவருங்கால், அங்குக்காலம் கழியப் பழக் காலம் வரும் ஆகலின், படையிடை வருவார், தங்கு உண்ணல் இயலாது பழமே உண்பர் ; படையின் இறுதி யில் சிற்போர் ஆண்டுவருங்கால் பழக்காலமும் பழங்கால மாய்க் கழிய, கிழங்கு தோன்றும் காலமாம் ஆதலின், அவர்கள் கிழங்கே உண்பர். இவ்வாறு, நாங்குக்காலத்தில் மழைந்த ஒரு படையின் கடைப்பகுதி, கிழங்குக்காலம் தோன்றிய பின்னரே அவ்விடத்தைவிட்டுக் கழியும் எனின், அப்படை எத்துணேப் பெரிது என்பதைப்பாருங் கள். இத்துணைப் பெரும்படையுடையான் நலங்கிள்ளி என்று கூறும் புலவரின் புல ைம | ல க் ைத ப் போற்றுவோமாக. வேந்தர்கள் தம் வெற்றிவிளங்க வலம்புரிச்சங்கு களே முழக்குவது பழந்தமிழ்ப் பண்பாடாம் ; நலங்கிள்ளி யின் காலத்தே தமிழகத்தில் வேறு பல அரசர்களும் வாழ்ந்திருந்தனர். எனினும், அவர்கள் எல்லாம் அவனுக்கு அடங்கி ஆள்பவரே அன்றித் தனியாசு செலுத்தும் தகுதி யுடைவால்லர் அவர்களிடத்திலும் வலம்புரிச்சங்குகள் இருந்தன எனினும், அவற்றை முழக்கினல், அவ்வொலி கேட்டு நலங்கிள்ளி சினப்பன் என அஞ்சி அவற்றை முழக்காது, அரண்மனையின் ஒருபால் வறிகே கொங்கவிட் டிருந்தனர் என்று கூறி கலங்கிள்ளியின் ஆற்றலை விளக்கி வியக்கார் புலவர் ஆலத்தாரார். இவ்வாறு நலங்கிள்ளியின் படைப் பெருமையினையும், ஆண்மைச் சிறப்பினையும் அகமகிழ்ந்து பாராட்டும் புலவர், அவன் இறந்த பின்னர், இறந்தான் நலங்கிள்ளி எனக் கேட்டுத் தம் அச்சம் நீங்கிய தமிழாசர்கள், இதுகாறும் முழக்காது கிடந்த தம்_வலம்புரிகளே முழக்கும் ஒலி கேட்டு, அந்தோ! இவ்வொலி கேட்டு இறவாத உயிர் வாழவேண்டியுளதே! என்னே கொடுமை!” என்று கூறி வருந்துவாராயினர் : - -