பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 கிழார்ப் பெயர்பெற்றேர் நடுங்கிற்று நாணழிய வாழும் வாழ்வும் ஒரு வாழ்வாமா? என எண்ணித் துய்ருற்ருள்; நாணழிவு காணப்பொருது, அந்நாணழிவுக் காரணமாய தன் காதலை மறந்துவிடலாம் எனிலோ, நாணினும் செயிர்தீர்கற்பே சேயிழையார்க்கு சிறந்தது. ஆதலின், காதல் வாழ்வை-கற்புநெறியைக் கைவிடவும் இயலவில்லை. நானும் அழியாமல், கற்பும் கெடாமல் வாழ்வதோ இயலாது; ஒன்று காண இழத்தல் வேண்டும்; அல்லது கற்பைக்-கா கலை-இழத்தல்வேண் ம்ெ; இரண்டும் ஒருங்கே இருப்பது அரிது ; ஒன்று கிற்கும் இடத்தில் மற்ருென்று கிற்பதில்லை : 'காமம் விடுவொன்ருே காண்விடு என்னெஞ்சே யானே பொறேன். இவ்விரண்டு” (திருக் கவசஎ) என்பது குறள். இவ்வாறு செய்வதறியாது வருந்தும் தன்பால் வந்த, தன் உயிர்த்தோழியிடத்தில் தன் துயர்நிலை கூறி வருந்தலாயினள் ; கோழி ! ஊரார் கூறும் பழிச்சொல் அஞ்சி, தலைவனேடு கலந்துறைவதை மறந்து வாழ்வே குயின், என் காதல் மெலிவுறும் ; பிறர் கூறும் பழிச் சொல் ஒழிக, என் காதலும் அழிக என எண்ணின், அதல்ை பெரும்பயன் இன்ரும் ; அவ்வாழ்வால் மிஞ்சுவது காண் ஒன்றே ; இழந்த என் நலனே முழுதும் பெறுதல் அரிது; கழை உணவு விரும்பிய யானே முறிக்க முறிந்த கிளை, ஒங்கி உயர்ந்திருந்த தன் பண்டைநிலையினை இழந்துவிட்டதாயினும், கிளேயின் நார்ப்பகுதி அரு திருந்தமையால் அடியோடு முறிந்து கிலத்தில் வீழ்ந்து பாழாகிவிடாமல், மரத்தினின்று தொங்கிக்கொண்டே இருத்தலே போல், தலைவல்ை நுகரப்பெற்று அழிந்த என் நலன், அவன் விரைவில் வரைந்துகொள்வன் என்ற நம்பிக்கையால் சிறிது அளவே கிலைபெற்றுளது ; ஆதலின் இந்நிலையில் செய்வதறியாது மயங்குவதல்லது வேறு என் செய்வேன்?’ என்று கூறி வருந்தினுள் : ' கெளவை அஞ்சின் காமம் எய்க்கும்; எள்ளற விடினே உள்ளது நாணே,