பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலத்தார் கிழார் 41 பெருங்களிறு வாங்க முறிந்து கிலம்படா.அ நாருடை ஒசியலற்றே கண்டிசின் தோழி! அவர் உண்ட என் நலனே.” (குறுங்: க.க.உ) இப்பாட்டில் உயர்குடிப் பிறந்து ஒழுக்கத்திற் சிறந்த ஒரு பெண்ணின் உள்ளத் துடிப்பினையும், தன் உள்ளத் துடிப்பை உணர்ந்த அவள் காட்டும் உவமைக் காட்சி யினேயும், புலவர் ஆலத்தார் கிழார் எவ்வளவு அழகாகத் தீட்டியுள்ளார் காணுங்கள். ஆலத்துனர் கிழார்பால் அரும்பெருங் குணங்கள் பல அமைந்து காணப்படுகின்றன; வறுமையிற் செம்மை; பெருக்கத்திற் பணிவு; சுருக்கத்தில் உயர்வு; பழியஞ்சல் ஆய பண்புகள் அவர்பால் பொருந்தியிருந்தன என்பதை அவர்பாக்களை அறிந்தார் அறிவர்; ஆலத்துாரார் அற முாைக்கும் நல்லாசிரியராவர் என்பதைக் கருவூர் முற்றி யிருந்த கிள்ளிவளவனுக்கு அவர் வழங்கிய நல்லுரையால் நன்கு விளங்கும். மறமுேரிடத்தே, அவர், அக்கிள்ளி வள வனுக்கு உரைத்த அறவுரை, அறிவுடைப் பெருமக்களால் பாராட்டப்பெறும் பெருமை வாய்ந்த தொன்ரும்; அவ் வறவுரையினே அறிந்து அதன்வழி ஒழுகி உயர்வீராக! ' ஆன்முலே அறுத்த அறனில் லோர்க்கும், மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும் குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும் வழுவாய் மருங்கின் கழுவாயும் உள என, கிலம்புடை பெயர்வதாயினும், ஒருவன் செய்தி கொன்ருேர்க்கு உய்தி இல் என, அறம் பாடிற்றே;” (புறம்: டச.) 'எந்நன்றி கொன்ருர்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ங்நன்றி கொன்ற மகற்கு” என்ற குறளுாைக்கு விளக்கம் போல் அமைந்த இவ்வற வுரையின் திண்மை உணர்ந்து மேற்கொள்வோமாக.