பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 கிழார்ப் பெயர்பெற்ருேர் நாடாவளத்தன நாடு என்ப; ஆளும் அரசர், தம் ஆட்சிக்குட்பட்ட நாட்டுமக்கள் நல்வாழ்வு வாழவேண்டுவர்; நாட்டார் நல்வாழ்வினராதல் வேண்டின், அங்காடு நிலத் தாலும், நீராலும் கிறைந்து வளங்கொழிக்கும் வாய்ப் புடைத்தாதல் வேண்டும். சோழநாடு அவ்வளத்தை இயற் கையிலேயே பெற்றிருந்தது; அவ்வளம் மேலும் பெருக வழிசெய்தான் கிருமாவளவன். அதனல், அந்நாடு அன்று தொட்டு வளத்திற் சிறந்து, சோழவளநாடு சோறு டைத்து,” என்ற சிறப்புற்றுத் திகழ்வதாயிற்று. கிள்ளி வளவன் காலத்தில் சோழநாடு பெருவளம் பெற்றிருந்தது; வளத்தின் அளவு எவ்வளவு என்பார்க்கு விடையாக, இவ்வளவு பாப்பு நிலம் இவ்வளவு உணவுப் பொருள் தரும் என்று கூறுதல்வேண்டும்; கிள்ளிவளவன் காலத்துச் சோணுட்டு கிலங்கள், பெண்யானேயொன்று படுத்தற்குப் போதிய சிறுகிலத்தில், ஏழு ஆண் யானைகளுக்கு ஒர் ஆண்டு முழுதிற்கும் வேண்டும் பெரும்பொருள் கரும் வ்ளம்பெற் றிருந்தன. இத்தகைய வளங்கொழிக்கும் பெருநாட்டினே யும், அந்நாடாளும் பேறுபெற்ற கிள்ளிவளவனேயும் கண்டு மகிழ விரும்பினர் ஆவூர் மூலங்கிழார். சோளுடு புகுந் தார்; அதை, "ஒருபிடி படியும் சீறிடம் எழுகளிறு புரக்கும் நாடு ' என வாயா வாழ்த்தினர் ; கிள்ளிவளவன் அர ருக்கையாம் உறையூர் சென்று அவனேக் கண்டார். ஆவூர் மூலங்கிழாரை அரசன் அதுகாறும் பார்த்திலாமையி குலோ, அல்லது, அவர் பெருமையறிந்து அவரைக் காண நாள்பல காத்திருப்பவும் அவர் நெடிதுநாள் கழித்து வந்தார் என்ற உள்ள வெறுப்பாலோ, வந்த புலவரை " தாங்கள் இதுகாறும் எந்நாட்டில் வாழ்ந்திரோ? அங். நாட்களில் ஒரு நாளிலாவது என்னே நெஞ்சால் கினைத் தாவது பார்த்துளிரோ எம் முள்ளீர்? எங் நாட்டீர் ?” என்று வினவிஞன். உடனே புலவர் ஆவூர் மூலங்கிழார், அரசே! நின் காட்டின் வளத்தையும், கின்ஆற்றலின் பெருமையினையும், அறியாதவனல்லன் நான் ; உலகில் சிறந்தது தேவருலகு