பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவூர் மூலங்கிழார் 47 என்ப; அத்தேவருலகு சென்று வாழ்மக்கள், தாங்கள் மண்ணுலகில் செய்த கல்வினேயின் பயனும் இன்பத்தையே ஆண்டு நகர்தலல்லது, ஆண்டிருந்தே அறம் செய்தலோ, அவ்வறத்தாலாம் இன்பம் பெறுதலோ இலாாதலின், அத் தேவருலகினும், ஈதலும், இரத்தலும் ஆகிய இருபெரும் தொழில்களும் நிகழும் இவ்வுலகே சிறந்த்தாம்; இவ்வாறு சிறப்புற்ற இவ்வுலகத்திலும், பிறநாடுகளுக்கில்லாச் சிறப் பொன்று கின்நாட்டிற்குளது. கின்நாடு, ஈவோர் இரப்போ ாாய இருவரையும் ஒருங்கே கொண்டு சிறப்புற்று விளங்குவ தோடு, ஆற்றல் மிக்க அரசனைக்கொண்ட சிறப்பும் உடை யது; எண்ணிய எண்ணியாங் கெய்தும் திண்மை நின்பால் உண்டு; நீ விரும்பினுல், ஞாயிறு நிலவொளிவீசி மகிழ் ஆட்டும்; திங்கள் வெப்புற்றுக் காயும்; கின் அருள் நோக்குப் பெற்றவர், பொன்னும் பொருளும் பெற்றுப் பொலிவு பெறுவர்; சின்னல் சினந்தோர் நாடு தீவாய்ப்பட்டு அழிந் தொழியும். ஆதலின் பரிசிலர் பலரும், கின் பகைவர் நாட்டில் வாழ்வாராயினும், கின்நாட்டையும், கின்னேயுமே நினைந்து வாழ்வர் என்ருல், கின்னிழல் பிறந்து, கின்னிழல் வளர்ந்த என்னைப்பற்றிக் கேட்கவும் வேண்டுமோ ?” அவன் ஆற்றலும், அவன் நாட்டின்சிறப்பும், தம் புலமையின்பெருமையும் ஒருங்கே தோன்ற விடைகூறிப் பாராட்டினர் : - ' வியன் தானை விறல் வேந்தே ! ,ே உடன்று நோக்கும்வாய் எரிதவழ, ,ே நயந்து நோக்கும்வாய் பொன்பூப்பச், செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும், வெண்திங்களுள் வெயில் வேண்டினும் வேண்டியது விளக்கும் ஆற்றலை; ஆகலின் கின்னிழல் பிறந்து நின்னிழல் வளர்க்க எம்மளவு எவனே மற்றே; இன்னிலைப் பொலம்பூங் காவின் நன்னட் டோரும் செய்வினை மருங்கின் எய்தல் அல்லகை, உடையோர் ஈதலும், இல்லோர் இாத்தலும்