பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கிழார்ப் பெயர்பெற்றேர் கடவதன்மையின் கையறவுடைத்து என ஆண்டுச்செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின், கின்னடு உள்ளுவர் பரிசிலர் ஒன்னர் தேஎத்தும் சின்னுடைத் தெனவே.” (புறம்: க.அ) புலவர் பாராட்டிய பாடற்பொருள் உணர்ந்த அரசன், அவர் புலமையின் பெருமையினேயும், அவரும், அவரொத்த புலவர்களும் தன்பால் கொண்டிருக்கும் அன்பின் பெருக் கையும் உணர்ந்து, அவரைத் தன் அவையில் சிலநாள் இருத்திச் சீர் பல அளித்து வாழ்ந்திருந்தான். வளவன் வாழ்த்த வாழ்ந்திருந்த ஆவூர்மூலங்கிழார், பகைவர் தம் கடத்தற்கரிய அரண்கள் பலவற்றையும், அரிய என எண்ணுது சென்று அழித்து, தோற்ற பகை யாசர்களின் தலையில் விளங்கும் பொன்னலாய முடிகளைக் கைக்கொண்டு அழித்து, அப்பொன்னல் கழல்செய்து காலில் புனைந்து பேராண்மை தோன்ற வாழும் வளவன் செயலறிந்து, அவன் உள்ளம் இவ்வாறு மறமே நிலைபெற இருத்தல் அறத்தாறன்று எனக்கொண்டு, அவன் உள்ளம் அன்பு மேற்கொண்டு அறவழிச் செல்வதை விரும்பி, அரசனே அண்மி, அரசே கின்னே இகழ்ந்தோர் எவரும் எழில்பெற விளங்கியதைக் காண்கிலேன்; அவானைவரும், கின்னல் ஆற்றல் குன்றி அடங்கி அழிந்தே போயினர்; அதைப்போலவே, கின் புகழ் பாடியோரெல்லாம் பொலி வுற்று வாழ்வதைக் காண்கின்றனனே அன்றி, அவருள் கிலையில் தாழ்ந்தார் எவரையும் காண்கிலேன்; இத்துணை ஆற்றல் வாய்ந்த கினக்கு யான் ஒன்று கூற விரும்புகின் றேன்; நின்பெயர், இவ்வுலகில் என்றும் கின்று வாழ வேண்டுமாயின், அதற்கு நீ பெற்றிருக்கும் ஆற்றல் ஒன்றே போதுவதன்று; காட்சிக்கெளியனுய்க் கடுஞ்சொல்லன் அல்லனுய் வாழும் மன்னனேயே உலகத்தார் உயர்த்திக் கூறுவர்; ஆதலின், வலியாான் கலிவெய்தி முறைவேண்டி வந்தார்க்கும், வறுமையால் தம் குறைகூறி வந்தார்க்கும், போத்தாணிக்கண், அமைச்சர், சான்ருேர் உள்ளிட்டா