பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவூர் மூலங்கிழார் 49 ரோடு காண்டற்கு எளியணுகி, எவரிடத்தும், எக்காலத் தும் கடுஞ்சொல் கடிந்தும் வாழ்தலை விரும்புகின்றேன்,” என்று அறிவுரைகூறி நல்வழிப்படுத்தி வாழ்ந்திருந்தார் :

ேேய, பிறர் ஒம்புறு மறமன் னெயில்

ஒம்பாது கடந்து அட்டு, அவர் முடிபுனைந்த பசும் பொன்னின் அடிபொலியக் கழல் தைஇய வல்லாளன; வய வேந்தே ! யாமே,கின் இகழ்பாடுவோர் எருத்தடங்கப் புகழ்பாடுவோர் பொலிவு தோன்ற இன்று கண்டாங்குக் காண்குவம்; என்றும் இன்சொல் எண்பதத்தை ஆகுமதி பெரும!’ (புறம்: ச0) தட்பவெப்பக் காலநிலைகளுக்கேற்ப தங்கள் வாழ் விடங்களை மாற்றி அமைத்த வாழும் வகையறிந்தவராவர் தமிழர்கள்; வேனிற்காலத்தில் வேண்டுமளவு தென்றல் நுழைதற்காம் சாலேகங்கள் அமைந்த வேனிற்பள்ளி களில் வாழ்வர்; குளிர்காலத்தில் வாட்ை நுழையாவாறு அமைந்த வாயில்கள் கொண்ட கூதிர்ப்பள்ளிகளில் குடி யிருப்பர்; அதைப்போன்றே, தங்கள் ஆண்டு கிறை காலத்தே இருந்து ஒய்வுபெறுவதற்காம் இனிய இடங் களைத் தேர்ந்து வாழும் வகையினையும் அவர்கள் அறிக் திருந்தனர்; சோலைகளிடையே வாழிடம் அமைத்து வாழ்ந்த பண்டையோர் வாழ்க்கையினே வகுத்துக்கூறும் தமிழ் நூல்கள், அவ்வாழ்விடங்களுக்கு இலவந்திகைப் பள்ளி எனப் பெயரிட்டு அழைக்கின்றன. அரசர்கள் அப்பள்ளிகளில் வாழும் காலம் ஆண்டுகிறைந்த முதுமைக் காலமாதலின், அவர்கள் வாழ்நாள் பெரும்பாலும் ஆண்டே முடிந்து போதலும் உண்டு. அவ்வாறு இறந்தார் பெயர்க ளோடு, அங்கிகழ்ச்சியை கினேப்பூட்டி வழங்கினர் தமிழர்; இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய கலங்கிள்ளிசேட்சென்னி என்ற பெயரைக் காண்க. அத்தகைய இலவந்திகைப் பள்ளியொன்றில் இறந்து, இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய கி. பெ.-4 .