பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 - கிழார்ப் பெயர்பெற்ருேர் மனைவியை கினேந்து, வெயில், பனி, மழை இவற்ருல் இடைவழியில் உண்டாம் இடையூற்றினே எண்ணுது செல் கின்றேன்.” ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும் ஒல்லாது இல்லெண் மறுத்தலும் இரண்டும் ஆள்வினை மருங்கிற் கேண்மைப் பாலே; ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது இல்லென மறுத்தலும் இரண்டும் வல்லே இரப்போர் வாட்டல்; அன்றியும் புரப்போர் புக்ழ்குறை பஉேம் வாயி லத்தை; அனைத்தா கியர் இனி; இதுவே எனைத்தும் சேய்த்துக் காணுது கண்டனம்; அதனல், நோயிலாாக நின்புதல்வர்; யானும் வெயிலென முனியேன், பனியென மடியேன்; கல்குயின்றன்ன என் நல்கூர் வளிமறை நாணல் கில்லாக் கற்பின், வாணுதல், மெல்லியற் குறுமகள் உள்ளிச் செல்வல் அத்தை சிறக்ககின் நாளே..?? (புறம் : க.கசு) ஆவூர் மூலங்கிழார் பாராட்டைப்பெற்ற மற்ருெரு பாண்டிய்ன், பாண்டியன் கீரஞ்சாத்தன் என்பவனவன். பேரரசர் வழிவராது, அவர் ஆட்சியில் அங்கம்பெறும் பிறரும், அப்பேரரசர் பெயர்களே மேற்கொள்வது வழக் காரும். இங்குக் கூறப்பெற்ற இவன், அவ்வாறு வந்த பாண்டியனே ஆவன்; ரேன், சாத்தன் என்பன அக்கால மக்கள் பயில மேற்கொள்ளும் மக்கட்பெயர்களாம்; கீரஞ் சாத்தன் என்ற தொடர், கீரன் மகன் சாத்தன் என்று பொருள்படும். ஆகவே, இவன் பெயரால் அறியப்படும் இவன் வரலாறு, இவன் பாண்டிய அரசிற்குக் கீழ்ப்பட்ட் ஒரு குறுநில மன்னனவன்; ரேன் என்பானின் மகன்; சாத்தன் என்னும் இயற்பெயருடையான் என்பதாம். ஆவூர் மூலங்கிழார், பாண்டியன் ரேஞ்சாத்தன் வாழ் பேரூர் சென்று அவன் வாழ்மனையினைக் கண்டார்; ஆங்குக்