பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5強 கிழார்ப் பெயர்பெற்ருேர் எறிபடை மயங்கிய வெருவரு ஞாட்பில் கள்ளுடைக் கலத்தர் உள்ளூர்க் கூறிய நெடுமொழி மறந்த சிறுபோாளர் அஞ்சி நீங்கும் கால எம மாகத் தாம் முந்துறமே.' (புறம்: கனஅ.) காரி என்ற பெயர் தமிழ்நூல்களில் பல்வேறிடங் க்ளில், பல்வேறு தொடர்புகளில் ஆளப்பட்டுள்ளது ; காரியாறு என ஒர் ஆற்றிற்கும், காரி நாடு என ஒரு காட்டிற்கும், காரிக்குதிரை என ஒரு குதிரைக்கும், மலையமான் திரு முடிக்காரி என ஒரு வள்ளலுக்கும், காரி கிழார் என ஒரு புலவர்க்கும் பெயராக வந்துளது. இத் துணைச் சிறப்பு வாய்ந்த காரி என்ற சொல்லைத் தன் பெயரின் ஒரு பகுதியாகக்கொண்ட ஒருவன், வீரனும், கொடையாளியுமாய் மல்லி என்ற ஊரில் வாழ்ந்திருந் தான். அவன் முழுப்பெயர் மல்லிகிழான் காரியாகி என்பது. அவனேப் பர்ராட்டிய பாடலில் குடநாடு குறிப் பிடப்பட்டிருப்பது கொண்டு, அவனுக்குரிய நாடு குடநாடு என்பர் சிலர் ; காரியாதிக்குரிய மல்லிநாடு, இப்போதுள்ள சீவில்லிபுத்துரைச் சூழ உள்ள நாடாம் ; சீவில்லிபுத்துர்க் கோயிற் கல்வெட்டுக்கள், சீவில்லிபுத்துரை, மல்லி நாட்டுச் சீவில்லிபுத்துர் என்றே குறிப்பிடுகின்றன எனி ஆறும், மல்லிநாட்டுப்புத்துர்ரே, மல்லிபுத்துார் எனவும், பிற் காலத்தே வில்லிபுத்துார் எனவும் மருவியது என்று கூறு வாரும் உளர். காரியாதிக்குரிய மல்லிநாடு சிறிய பல அரண்களே நெருங்கக் கொண்டிருப்பது ஆதலின், அங்காட்டுள், அவ லுக்குவேண்டியோரும், போரின்றி அமைதி கிலவும் காலத்திலேயே துழைதல் இயலும்; போர்க்காலத்திலோ, எங்கும் திரியும் கிங்களும் அங்காட்டுள் நழைதல் இயலாது ; அத்துணேச் சிறந்த காவலமைந்தது ; அங் நாட்டுத் தலைவனுகிய காரியாதி, குடநாட்டு மறவர் கொன்று கொணர்ந்த எய்ப்பன்றியின் கறிவிாவிச் செய்த வெண்சோற்றினை விடியற்காலையில், பனேயோலையால்