பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ. ஆவூர்மூலங்கிழார் மகனுர் பெருந்தலைச் சாத்தனுர் இவர், பேரரசர்கள், குறுகிலத்தலைவர்கள், அந்தணர் முதலாய பெருமக்களைப் பர்டிப் புகழ்பெற்ற ஆவூர் மூலங் கிழாரின் அரிய மகனுவர். பெருந்தலைச் சாத்தனர் என்ற பெயருடையவர்; இவர் பெயர்க்கு முன்வரும் பெருந்தலை என்ற அடை, இவர்க்கு உறுப்ப்ானன்றி, அறிவுப்பெருக் கங் கருதிக் கொடுக்கப்பட்டுள்ளது என்ப; அகநானூற்றில் வினேமுற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது என்ற துறை தழுவிவந்த பாடல் ஒன்றே இவர்பெயரால் வந்துளது. இப்பாட்டைப் பாடியோர் பெயராக, ஆவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன் என்பது சில ஏடுகளில் காணப்படுகிறது ; ஆவூர்கிழார் மகன் பெயர் கண்ணனர் என அறியப்படுதலால் அப்பாடம் பொருந்தாது என்ப. தலைவன் குறித்துச் சென்ற பருவம் வந்துற்றமை உணர்ந்த தலைவியின் உள்ளத்தில் தலைவனப்பற்றிய எண் ணமே தலைதுாக்கி கின்றதாகலின், அவள் ஈண்டிருப்பினும் ஆண்டுள்ளாள் போலாயினள்; அதனல், ஆண்டு, அவன் தேரில் குதிரைகளைப் பூட்டுவதும், அக்குதிரைகள் கொல்லன் உலையினின்றும் எழும் ஒவியேபோல் பெரு மூச்சுவிட்டுக் காற்றுப்போல் கடுக.நடப்பதும், அதல்ை, அவற்றின் வாயில் வெண்னுரை வெளியாவதும், அவை ஒடும்வேகத்தால், அந்துரை உள்ளிருக்கும் தலைவன் மார்பில் தெறித்து வீழ்வதும், வழியில் மரையா முத லாயின. தேரின் விரைவஞ்சி ஒடுவதும் ஆய ஆண்டு கிகழ் காட்சிகள் எல்லாம் அவள் கண்முன் சிற்பவாயின; அவள் அரிசியைப் பதமாக உலர்த்தி உருளையில் இட்டு அரைக் குங்கால் எழும் ஒசை, அவன் தோாழி பெருமணலில் பதிந்து ஒடுங்கால் எழும் ஒலியினை கினேப்பூட்டுவதாயிற்று. ஆண்டிருக்கும் அவனும், அவள் நம்செயல்களேயெல்லாம் அகக்கண்ணுல் கண்டுகொண்டே நிற்பள்; மேலும் இரவும் வந்துவிட்டது; ஆகவே, பாக! தேரை விரைந்து ஒட்டு