பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. இடைக்குன்றுார் கிழார் இடைக்குன்றார் கிழார், இடைக்குன்றார் என்ற ஊரினர்; தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழி யனைப் பாராட்டியவர் ; இவையல்லது, இவர் வரலாழுக வேறு எதையும் அறிந்துகொள்வதற்கில்லை. இவர் நெடுஞ் செழியனின் இளமைக் கோலத்தைக் கண்டு பாராட்டியவ ராதலின், இவர் அவன் தலைநகராம் மதுரைக்கு அருகே யுள்ள ஊரினராவர் என்று கொள்ளலாம்; கழிகளுக்கு இடைப்பட்ட நாடு, இடைக்கழி நாடு என அழைக்கப் பெறுதல்போல், குன்றுகளுக் கிடைப்பட்ட ஊர், இடைக் குன்றுார் என அழைக்கப்பெறும் என்று கொண்டால், பாண்டிநாட்டில் குன்றுகள் கிறைந்த பழனிமலைத் தொட ரைச் சார்ந்தோ, அல்லது திருப்பாங் குன்றுகளைச் சார்ந்தோ இவர் ஊர் அமைந்திருத்தல் கூடும் என்றும் கொள்ளலாம். இவராற் பாடப்பெற்ருேன், தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஒருவனே. சங்ககாலப் பாண்டிய மன்னர்களுள், தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் தலைசிறந்தோ வைன் ; இவனைப்பாடிய புலவர் பலராவர்; பத்துப்பாட்டுள் நெடுநல்வாடையும், மதுரைக்காஞ்சியும் இவன் புகழ் பாடவந்த பாடல்களாம்; இவ்வாறு இவன் புலவர் பலர் பாராட்டைப் பெறுதற்குக் காரணமாயது, அவன் தலை யாலங்கானத்தே பெற்ற பெருவெற்றியே யாகும்; நெடுஞ் செழியன், அரியணை ஏறுங்கால் மிகமிக இளையன் ; பொதியமலைப் பல்வளமும், கொற்கைத்துறை முத்தும் பெற்று, பாண்டிய நாடு பெருஞ் செல்வத்தால் செழிப் புற்றுத் திகழ்ந்தது; இதைக் கண்ணுற்றனர் அவன் பகை யாசர்கள்; யானைக்கண்சேய் மாந்தரம் சோலிரும் பொறை யும், ஒரு சோழனும், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் ஆகியோரும் அவன் பகைவராவர். இவர்கள் எழுவரும், நெடுஞ்செழியன் கடிதிக்ாயன்; அவனே வென்று பெறும்பொருளோ மிகப்