பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்குன்றுார் கிழார் 63 பல ” என்ற எண்ணி, அனைவரும்கூடி, அவனே அவனுார் வாயிலிடத்திலேயே எதிர்த்தனர்; இளைஞனே எனினும், ஈடில்லாத் திறனுடையதைவின், அவர் செயல்கண்டு நாணி, “ அவர்களே அழித்து, அவர்கள் முரசொடு, அவர்களையும் கைப்பற்றேஞயின், கொடுங்கோலன் எங்கள் அரசன் எனக் குடிகள் என்னேப் பழிதுாற்றுவாராக ! புலவர்கள் என் காட்டைப் பாடாதொழிக இரப்போர்க்கு ஈயலாகா இழிநிலையினை நானும் எய்துவேனுக !’ என்று வஞ்சினம் கூறித், தன் வாயில்வந்து நின்ற அவர்களே எதிர்த்துப் போரிட்டான் ; அவன் போர்வன்மைக்காற்ருது, அரசர் கள் தோற்ருேடலாயினர்; தோற்ருேடும் அவர்களைத் துரத்திச் சென்று, கஞ்சைமாவட்டத்தில், தலையாலங் கானம் என்னும் இடத்தில் மடக்கிப் போரிட்டு வென்முன். எதிர்த்த ஏழாசர்களையும் இளமைக்காலத்திலேயே வென்ற சிறப்பறிந்து, அவ் வெற்றிச்செயலை அவன் பெயரோடு இணைத்து வழங்கினர்; தன் நாட்டுள் புகுத்து எலிவுசெய்ய முயன்ற பகைவர்களைப் பாழ்செய்து வென்ற நெடுஞ் செழியன், பின்னர்ப் பகைவர் சாடுகளுள் தான் புகுந்து போரிடலாயினன் ; ஒருமுறை கொங்குநாடு நோக்கிச் சென்று, வழியிற்கிடந்த நாடு பலவற்றையும் கைக்கொண்டு இறுதியில் கொங்கரையும் ஒட்டி வெற்றிபெற்ருன் ; இவ் வெற்றி குறித்து அவன் கூடல்நகரில் விழாவும் கொண்டா டினர்; கொங்கரொடு நடத்திய இப்போரில், பாண்டியர் படைத்தலைவனுகிய அதிகன் என்பான் இறந்தான் ; பகைவர்படைத்தலைவன் பட்டான் என்று கேட்டுக் கொங் கர்கள் ஆரவாரமும் செய்தனர்; மற்ருெருமுறை செழியன் சேரநாடு சென்று, செல்வத்தாற் சிறந்த அவன் முசிறித் துறையை முற்றிச் சேரன் யானைப்படைகளை அழித்து வென்று மீண்டான் ; இவ்வாறு சேயபல நாடுகளையும் வெற்றிகொண்ட செழியன், தன் நாட்டின் அணித்தே, நீர்ே என்னும் ஊரில் அரசிருந்த எவ்வி என்பானேவென்று அவனுக்குரிய மிழலைக்கூற்றத்தையும், வேளிர்க்குரிய முத்துர்க்கூற்றத்தையும் தன் ஆட்சிக்குட்படுத்திக்கொண் J...JT&JT,