பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 கிழார்ப் பெயர்பெற்ருேர் நெடுஞ்செழியன், தன் பாசறையில் போர்வீரர்க ளோடு வாழும் பாசறைவாழ்க்கை வியந்து போற்றற் குரியதாம். பகைவர் யானப்படைகளே, அழித்த போரில் நெடுஞ்செழியன் வீரர்களில் பலர் வாட்புண் பெற்றுவிட்ட னர்; இதை அறிந்தான் அரசன் , அறிந்த நோம், இாவின் நடுயாமம்; குளிர்ந்த வாடைக்காற்று வீசிக்கொண்டிருக் கும் குளிர்காலம் மழைத்துளிகள் மாருது வீழ்ந்து கொண்டே இருக்கும் மழைக்காலம்; எனினும், காலத்தின் கொடுமையினைக் கருதினைல்லன் ; புண்பட்ட வீரரைக் கண்டு ஆறுதல் உரைத்து அன்புகாட்டி வரவேண்டும் என்ற ஆசை, காலத்தின் கொடுமையினே மறக்கச் செய்து விட்டது; வாடை வீசுவதால், தெற்கே சாய்ந்து விளங்கும் அழல்களைக்கொண்ட பெரிய பாண்டில் விளக்குகளை ஏந்திய பலர் முன்னே நடந்தனர்; கலையில் வேப்பந்தாரும், கையில் நெடிய வேலும்கொண்ட படைத்தலைவன் முன்வா, மழைத்துளி மன்னன் மீது விழாமை குறித்து எடுத்த வெண்கொற்றக் குடையேந்தியோன் பின்வர, நெடுஞ் செழியன், காற்ருல் அலைப்புண்டு கீழேவிழும் மேலாடை யினை இடக்கையால் பற்றிக்கொண்டு, கோளில் தொங்கும் வாள்மீது வைத்த வலக்கையய்ை, வழியில் வரிசையாக கிற்கும் குதிர்ைகள் உடல் சிலிர்த்து உதறுவதால், அவற் றின் உடல்மேல் தங்கிய மழைநீர் தன்மேல் சிதறச் சேறு நிறைந்த கெருவில் நடந்துசென்று, படைத்தலைவன் புண் பெற்ற வீரர்களையும், அவர்கள் பெற்ற புண்களின் நிலை யினையும் காட்டிக்கொண்டே செல்ல, அவ் வீரர்களுக்கு அன்புரை வழங்கி வரலாயினன்; இவ்வாறு பேயும் உறங் கும் நயோமத்திலும் உறக்கம் ஒழித்துப் போர்மேல்சென்ற எண்ணமும், சூழ்ச்சியும் உடையய்ை வாழும் நெடுஞ் செழியன் பாசறை வாழ்க்கையினை ஆசிரியர் நக்கீரனர், நெடுநல்வாடையில் நன்கு விளக்கியுள்ளார். இவ்வாறு சிறப்புற்று விளங்கிய நெடுஞ்செழியன் புகழ கின்று விளங்குதற்குக் காரணமாயது, அவன் கன்னிப்போராம் தலையாலங்கானத்துப் போரேயாதலின்,