பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கிழார்ப் பெயர்பெற்ருேர் முன்மயிர் கழித்த தலையில் வேம்பின் தளிரும், உழிஞைக் கொடியும் அணிசெய்ய, கையில் வளே களைந்து, வில்லேந்தி விற்கும் இவ்வீான இளைய நெடுஞ்செழியன்! அவன் மாலை பணிந்தானேயன்றி, தீது நீங்க என்று அவன் பெற்ருேர் பிள்ளைப் பருவத்தே கட்டிய ஐம்படைத் தாலியை அவன் இன்னமும் நீக்கினுன் அல்லனே! பாலுணவு மறந்து சோற் அணவு உட்கொள்ள இன்றன்ருே கண்டேன்; அவனு இவன் தேர்த்தட்டில் இதோ கிற்கும் இவ்வீரன், தன்மேல் பகைத்து வரிசை வரிசையாக வரும் புதிய வீரர்களின் ஆற்றல் கண்டு அதிசயிப்பதோ, அவர் ஆற்ருமை கண்டு பழிப்பதோ செய்யானுய், அவர்களே வெல்வது ஒன்றே குறிக்கோளாய், ஒருசேர வளைத்து, ஆரவாரம் செய்து, ஒருவரும் எஞ்சாதவாறு அழித்து வெற்றிகொண்டும், அவ்வாறு வெற்றிபெற்ற அங்கிலேயிலும், தன் வெற்றி கண்டு மகிழ்ச்சியோ, செருக்கோ கொண்டிலன்; என்னே இவன் போர் அறிவு இத்துணேப் பேர் அறிவு, இளையணுய இவனுக்கு எப்படி உண்டாயிற்று ? அதை இவன் எப் போது பெற்ருன்சி பெறுதற்காம் பருவமும் அன்றே இவன் பருவம்! என்றெல்லாம் வியந்து சிற்பாராயினர்.: ' கிண்கிணி களைந்தகால் ஒண்கழல் தொட்டுக், குடுமி களைந்ததுதல் வேம்பின் ஒண்தளிர் நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலேந்து, குறுக்தொடி கழித்தசைச் சாபம் பற்றி, நெடுங்கேர்க் கொடுஞ்சி பொலிய கின்ருேன் யார்கொல் வாழ்க அவன்கண்ணி! தார்பூண்டு, தாலி களைந்தன்றும் இலனே! பால்விட்டு அயினியும் இன்று அயின்றனனே!! வயின்வயின் உடன்று மேல்வந்த வம்ப மள்ளாை வியக்தன்றும், இழிந்தன்றும் இலனே! அவரை அழுந்தப் பற்றி அகல்விசும்பு ஆர்ப்பெழக் - கவிழ்ந்து நிலம்சோ அட்டதை மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும் அதனிலும் இலனே!” (புறம்: எள)