பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. உகாய்க்குடி கிழார் தமிழ்நாட்டுப் புலவர்கள் பிறந்து வளர்ந்த பேரூர் களில் உகாய்க்குடியும் ஒன்று ; ஆனால், புலவர் ஒருவாைப் பெற்றுத்தந்த இப்பேரூர், தன் பெயரை மட்டும் தமிழகத் திற்கு அளித்ததே யன்றி தன் இடம் இயல்பு பற்றிய எதையும் அறிவித்திலது. பொருள் தேடப் புறநாடு செல்லத்துணிந்த ஒர் ஆண் மகன், தன் மனைவியைவிட்டுப் பிரியமாட்டாது வருங்கிக் கூறிய அவன் கடனறி உள்ளம் விளங்க உரைத்த ஒரு பாட்டே உகாய்க்குடி கிழார் பெயரால் கிடைத்துளது ; அவ்வொரு சிறு பர்ட்டிலேயே அரிய பெரிய அறவுரைகள் சிலவற்றை அவர் அளித்துள்ளார். & இருக்தோம்பி இல்வாழ்வதெல்லாம், விருந்தோம்பி வேளாண்மை செய்தற்பொருட்டு ' (திருக்: அக} என்ப. இவ்வுலகில் வாழ்கின்ற வரையிலும், இன்ப வாழ்வு வாழ்தலும், ஈண்டிருந்து மாய்ந்து மறைந்த வழித் தம் பெயர் அழியாது கிற்றல் கருதி அறமாற்றுவதும் மக்கட் பிறவியின் பயன் என்ப; அத்தகைய மக்கட் பயனும் இன்பத்திற்கும், அறத்திற்கும் பொருள் மிக மிக இன்றியமையாததாம் ; பொருள் பெற்ருர்க்கே அவ் விாண்டும் வாய்க்கும்; அது வாய்க்கப் பெருதார், அவற்றை அடைதல் இயலாது ; அத்தகைய பொருள், முயற்சியின்றி முடங்கிக் கிடப்பார்க்குக் கிடைத்தல் அரிது : இவ்வுண்மையினே அறிந்த தலைமகன் ஒருவன், அப்பொருள் தேடப் புறப்படத் தொடங்கினன். கடனறிந்து செல்லத் துணிந்த அவனே, அவன் மனேவி பாற் கொண்டுள்ள அன்பு தடுத்து கி.முத்துகிறது; இவளே உடன்கொண்டு செல்வது சின்னல் இயலாது ; அது முறையுமன்று ; இவளை ஈண்டுவிட்டுத் தனித்துச் சென்று துயர்தாங்கும் வன்மை கினக்கு உண்டாகுமோ என்று அவனே யாரோ கேட்பதுபோல் உணர்ந்தான் ; அந்தக் கேள்விகளையே, அவன், பொருள் வேண்டிப் பிரிய எண்