பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழார்ப் பெயர்பெற்ருேர் سسجہ 4 مس۔ایس۔ தோற்றுவாய் தமிழகத்தில் சங்ககாலத்தே வாழ்ந்த மக்கள், ஆயர், வேட்டுவர் எனவும், பாணன், பறையன் எனவும், அந்தணன், அரசன் எனவும் தொழில்பற்றிப் பிரித்து அழைக்கப்பட்டுள்ளனர். எனினும், அப் பிரிவுணர்ச்சி, அவர்கள், வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்தற்கு வழிசெய் வனவாய கல்வி, பொருள் ஆகிய இவைகளைப் பெறுதற்குச் சிறிதும் தடையாய் நிற்கவில்லை. பிரித்துணர்ந்து பாழ் செய்யும் பொல்லாங்கில்லா நல்வாழ்வு பெற்றிருந்த கார ணத்தால், பல்வேறு குடிகளில் பிறந்த அவர்களுள் பலர், அந்தணர்க்கும், அரசர்க்கும் அறமுரைக்கவல்ல அறிவு சான்ற புலவர்களாய்ப் பெருகிலைபெற்று விளங்கினர். படிக்க ஒர் இனம் ; பாடுபட ஒர் இனம் என்ற கிலே, நிலைபெறுவதால் ஒர் இனம், படித்தப் பாராண்டு உயர, ஏனையோர், எழுத்தறிவுபெறும் வாய்ப்பும் இலாாய்ப், பாட்டாளிகளாய்ப், பசியும், பிணியும் உற்றுப் பாழுமம் இழிகிலே இன்றி, எக்குடிப்பிறப்பினும், யாவரேயாயினும், அக்குடிவந்தார் அனைவரும் கற்றற்குரியர் என்ற உயர்நிலை பெற்றுத் திகழ்ந்த காரணத்தால், பண்டைத் தமிழகத்து எல்லாக் குடிகளிலும், இறப்ப உயர்ந்த கல்வியறிவு பெற்றுக் கவினுற்று வாழ்ந்தாரைக் காணுகின்ருேம். அக்கால அரசர்களும் பிறரும், அப்புலவர்கள் எக்குடிப் பிறந்தாராயினும், அவர்தம் குடிகொண்டு குறை