பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக. ஐயூர் மூலங்கிழார் தமிழ் நாடாண்ட அரசர் மூவரேயாயினும், அவருள் தமிழ் வளர்த்த பெருமையுடையார் பாண்டியரேயாவர்; மொழி வளர்த்த பெருமை, பொதுவாகப் பாண்டி நாடாண்ட முடி மன்னர் அனைவர்க்கும் உரித்து எனினும் அவர்களுள் கடைச்சங்கம் இரீஇய பாண்டியர் நாற்பத் தொன்பதின்மருள் ஒருவன், எட்டுத்தொகை நூல்களுள் ஒன்ருகிய அகநானுர்ற்றைத் தொகுப்பித்தோன் ; திருக் குறள் அரங்கேறிய அவைக்குத் தலைமை தாங்கினேன் என்ற சிறப்பினை உடைய்ோன் ; உக்கிரப்பெருவழுதி என்ற பாண்டியன் ஒருவனே. பழந்தமிழ் அரசர்கள், ஒற்றுமை குன்றி ஒருவரோ டொருவர் பகைத்துப் பேர்ரிட்டு வந்தமையினலேயே தமிழகம் தன் பெருகிலே இழந்து பாழுற்றது என்ற பழிச் சொல் பெறும் பெருமையும், பாண்டிய அரசர்களுள் இவ் வொருவனுக்கே உண்டு. தன் காலத்தே சோ நாடாண் டிருந்த சேரமான் மாரிவெண்கோவையும், சோளுடாண் டிருந்த இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியையும் தன் நண்பர்களாகக்கொண்டு கலந்து வாழ்ந்து அருந்தமிழ்ச் செல்வியாம் ஒளவையாரின் பாராட்டைப் பெற்றுளான் உக்கிரப் பெருவழுதி. இவன்பால் இத்துணைச் சிறப்புக்கள் உளவாகவும், இவன் காலத்தார், அவற்றுள் எதையும் இவன் பெயரோடு இணைத்துப் பாராட்டாது, அவன் வேங்கைமார்பன் என்பானுக்குரிய, காவல் செறிந்த கானப்பேரெயில் என்ற கோட்டையைக் கைப்பற்றிய வெற்றிச்சிறப் பொன்றையே இணைத்து, கானப்பேரெயில் கடந்த உக்கிாப்பெருவழுதி என வழங்கிப் பாராட்டினர் என் முல், அவன் பெற்ற இவ்வெற்றியாலாம் புகழ், அவனின் ஏனைச் செயல்களால் ஆம் புகழினும் சிறந்தது என்றன்ருே பொருள்?