பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயூர் மூலங்கிழார் 75。 உக்கிாப்பெருவழுதியின் உயர்விற்குக் காாணமாய இச்செயலறிந்து பாராட்டிய பெருமை புலவர் ஐயூர் மூலங் கிழார்க்கே உரித்து ; அவர் அக்கோட்டையின் அகழி, மதில், காவற்காடு இவற்றின் அருமையினையும், அதைக் கைக்கொண்ட உக்கிரப்பெருவழுதியின் ஆற்றற் பெருமை யினையும் அதை இழந்த வேங்கைமார்ப்ன், காய்ச்சிய இரும்புண்ட நீரை எவ்வாறு மீண்டும் பெறல் இயலாதோ, அவ்வாறே, உக்கிரப்பெருவழுதி கை ப்ப ற் றிய இக் கோட்டையை மீட்டலும் இயலாதே: r 'கருங்கைக் கொல்லன் செந்தி மாட்டிய - இரும்புண் நீரினும் மீட்டற்கு அரிது’ (புறம்: உக). என எங்கும் ஏக்கத்தையும் நன்கு எடுத்துப் பாராட்டி யுள்ளார்.