பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஉ. கருவூர் கிழார் மதுரை பாண்டியர்க்கும், உறந்தை சோழர்க்கும் தலைநகரங்களாய் அமைந்து சிறப்புற்றதேபோல், சோர்க் குத் தலைநகராய் அமைந்து சிறப்புற்ற நகரம் கருவூர்; சோழபாண்டிய தலைநகரங்கள் எவ்வாறு புலவர் பலரின் பிறப்பிடமாய்ப் பெருமையுற்றனவோ, அவ்வாறே கரு ஆரும் புலவர் பலரைப் பெற்றுப் பெருமையுற்றுளது; புலவர் பெருமக்கள் பன்னிருவர் கருவூர்க்கண் பிறந்து வாழ்ந்திருந்தனர்; இவ்வாறு சிறப்புற்ற கருவூர் யாண் டுளது என்பதில் தமிழ்நாட்டு அறிஞர்கள் இன்றும் ஐயங் கொண்டிருப்பது வியப்பினும் வியப்பே. அது, 'கொங்கு நாட்டுத் தலங்களுள் ஒன்றும், இப்போதைய திருச்சிராப் பள்ளி மாவட்டத்தைச் சார்ந்துள்ளதுமாகிய கருவூரே” என்பர் சிலர்; மலைநாட்டில், மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்துப் பேரியாற்றங்கரையிலுள்ள திருக்கரூாாம் என்பர் மற்றும் சிலர். சேரநாட்டின் சிறந்த ஊர்களுள் ஒன்ருய கருவூரில் பிறந்த நம் கிழார், தன் கணவன் அன்பில் ஐயுற்று கம்பிக்கை இழக்காத இல்லாள் ஒருத்தியின் உயரிய உள்ளத்தை உயிரோவியமாக்கித் தந்துளார். ஆண்மகன் ஒருவன் ஒருபெண்ணை மணப்பதாக வாக் குறுதி அளித்து, அம்மணவினேக்காம் பொருள் தேட வேண்டி வெளிநாடு சென்றுவிட்டான்; சென்றவன் விரை வில் வங்கிலன்; அவன்வாராமை உணர்ந்த ஊரார், அவன் அன்பில் ஐயுற்று அவன் ஒழுக்கத்தைப் பழித்துப் பேச லாயினர்; அவர்கள் அவ்வாறு கூறுவதை, அப்பெண் னிடம் அவள் தோழி எடுத்துக் காட்டினள். அது : 'பவரும் கூறுக அஃது அறியா தோாே; மலேகெழு நாடன் கேண்மை தலைபோகாமை நற்கறிந்த னென் யானே.” (குறுங் கஎ0)